இன்று இந்துவத்துவா மதவெறி சக்திகள் ராமர் பாலம் என்று ஒரு பொய்யை சொல்லி போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.
ஏன் இந்த போராட்டம்? உண்மையில் இல்லாத ஒன்றை காப்பாற்ற ஒரு போராட்டம் தேவையா? இன்னும் ஏன் இந்த பின் புத்திக்கார்களுக்கு இந்த வேலை?
பா.ஜ.க.வினர் மட்டுமல்ல, பார்ப்பன செயலலிதாவே'ராமன்' கட்டிய பாலத்தை இடித்துவிட்டு சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வரக் கூடாது என்கிறார். இராமகோபாலன்களும், இல.கணேசன்களும், குருமூர்த்திகளும் பூணூலை உருவிக் கொண்டு தொடை தட்டுகிறார்கள்.இராமன் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூறுகிறார்கள்.
அடுத்து அனுமான் எரித்துப் பொசுக்கிய இலங்கை இருக்கக்கூடாது என்று போராடினாலும் வியப்பதற்கு இல்லை.
கற்பை நிருபிக்க பெண்கள் - இராமபிரான் வைத்த சோதனையைப் போல் 'எரியும் நெருப்பில் குளித்து மீள வேண்டும்' என்று கூட அடுத்தப் போராட்டத்தை இவர்கள் தொடங்கிவிடலாம்.
இந்த மதவெறி சக்திகள் பரப்பி வரும் கருத்துகளில் கடுகளவாவதுஉண்மையோ, அறிவு சார்ந்த வாதங்களோ இருக்கிறதா?
இராமாயணம் எப்போது நடந்தது? 'திரேதாயுகத்தில்' நடந்தது என்கிறார்கள். அதாவது 17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு! இந்த 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு - மனித இனமே உருவாகவில்லை. இரண்டு கோடி வருடங்களுக்கு முன் 'பிரை மேட்ஸ்' எனும் குரங்கினம் தோன்றியிருக்கின்றன. அவற்றிலிருந்து 20 லட்சம் வருடங்களுக்கு முன் தான் - மனிதனின் மூதாதைகள் உருவாகின. அதற்குப் பிறகு சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தான் நவீன மனிதன் உலகம் முழுதும் பரவ ஆரம்பித்துள்ளான். மனித உயிர்களின் பரிணாம வளர்ச்சியே பெறாத காலத்தில் - ராமன் வாழ்ந்தான் என்பதும் - அவன் பாலம் கட்டினான் என்பதும் கட்டுக்கதை - அல்லவா?
இன்று உலகில் தனித் தனியாக உள்ள கண்டங்கள் ஒரு காலத்தில் ஒன்றோடு ஒன்றாக இணைந்தே இருந்தன. பூகோளவியலில் இப்படி ஒன்றாக இணைந்திருந்த நிலப்பிரிவு, "பாங்கியா" என்று அழைக்கப்படுகிறது. பூமியின் வெப்பத்தினால் மாற்றங்கள் நிகழ்ந்தன. பூமியின் மய்யப் பகுதி இறுகி, அதனால் மேல் பகுதிகள் இளகி, ஒன்றிலிருந்து ஒன்றாகப் பிரிந்து பல கண்டங்களாக உருவெடுத்தன. இதை கண்டங்களின் விலகல் (கான்டினென்டல் டிரிப்ட்) என்று பூகோளவியல் கூறுகிறது. இதைப் பற்றி - பூகோளவியலிலும் நிலவியலிலும் விரிவாக கற்றுத் தரப்படுகிறது. இந்தப் பாடத்துக்குப் பெயர் 'வேகனர்ஸ் கான்டினென்டல் ட்ரிப்ட் தியரி' என்பதாகும். இப்படி ஒன்றாக இணைந்திருந்த கண்டங்கள் விலகியபோது இரு கண்டங்களை இணைத்திருந்த ஒரு நிலப்பரப்பு கடலுக்கு அடியில் போனது. புவியியலில் இதற்குப் பெயர் 'இஸ்மஸ்' என்பதாகும். இதுதான் கடலுக்கு அடியில் உள்ள மணல் திட்டுகள். இந்த மணல் திட்டுகள் ராமேசுவரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் சேது சமுத்திரத்திட்டம் அமையப் போகும் இடத்தில் மட்டும் தான் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதில்.உலகில் ஏராளமான இடங்களில் இதேபோல் மணல் திட்டுகள் கடலுக்கு அடியில் இருக்கின்றன.
தென் அமெரிக்க மற்றும் வட அமெரிக்க கண்டங்களை இணைக்கும் கடல் பகுதியில் இத்தகைய மணல் திட்டுகள் இருக்கின்றன. இந்த மணல் திட்டின் மீதுதான் பனாமா கால்வாய் வெட்டப்பட்டு, கப்பல்போக்குவரத்து நடைபெறுகிறது. பசிபிக் கடலையும், அட்லாண்டிக் கடலையும் இணைப்பது பனாமா கால்வாய் தான். இந்தக் கால்வாய் அமையாமல் போயிருக்குமானால், பசிபிக் கரையோர துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள், தென் அமெரிக்கக் கண்டம் முழுவதையும் சுற்றி வர வேண்டியிருந்திருக்கும். அய்ரோப்பா கண்டத்தையும் - ஆப்பிரிக்கா கண்டத்தையும் இணைக்கும் கடல் பகுதியிலுள்ள மணல் திட்டு மீது தான் சூயஸ் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைப்பது சூயஸ் கால்வாய்தான். இதன் வழியாக வெற்றிகரமாக கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நியுசிலாந்து தீவுக்கு அருகிலுள்ளவை ஆக்லாந்து தீவுகள் மற்றம் கிரேட்டர் ஆக்லாந்து தீவுகள். இவைகளை இணைக்கும் கடலுக்கடியில் மணல் திட்டுகள் இருந்தன. இந்த 'மணல் திட்டு'களை வெட்டி எடுத்து - அங்கே கால்வாய் கட்டப்பட்டு, தீவுகள் இணைக்கப்பட்டுள்ளன.
கனடா நாட்டை - அதன் அருகே - நியுபவுண்ட் லான்ட் தீவுகளை இணைக்கும் கடல்பகுதியிலும், ஆஸ்திரேலியாவை - அதன் அருகே உள்ள டாஸ்மேனியா மற்றும் புரூனித் தீவுகளையும் இணைக்கும் கடலுக்கு அடியிலும் உள்ள மணல் திட்டுகள் வெட்டி எடுக்கப்பட்டு கால்வாய்கள் வெட்டப்பட்டு, கப்பல் போக்குவரத்து நடந்து கொண்டிருக்கிறது.
Tuesday, September 25, 2007
ராமர் பாலம்! என்று ஒரு பொய்
Posted by சசி at 9:52 PM
Labels: ராமர் பாலம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment