Showing posts with label புத்தர். Show all posts
Showing posts with label புத்தர். Show all posts

Wednesday, September 26, 2007

புத்தர்


நான் இந்த உலகத்துடன் முரண்படுவதில்லை; இவ்வுலகத்தில் உள்ள மனிதர்கள் தான் என்னுடன் முரண்படுகிறார்கள். உண்மையை நேசிக்கும் ஆசிரியன், பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் போது, கடவுள் கருத்துகளை இறுதியென நம்பி வாழும் மக்கள் முரண்படுவது இயல்பு. இம்முரண்பாட்டை நீக்க, நாம் மக்களை வெறுக்க வேண்டியதில்லை. அவர்களின் நெஞ்சங்களில் ‘தம்ம'த்தை விதையுங்கள். அவர்கள் மனம் தெளிவடையும். முரண்பாடுகள் நீக்கப்படும். - புத்தர்

என்னதான் செய்வது? எங்கிருந்து தொடங்குவது? யாரை, யார் எதிலிருந்து எவ்வாறு விடுதலை செய்வது? அச்சத்தினின்றும், அறியாமையினின்றும் விடுதலை பெற வேண்டியதுதான் - மானுட விடுதலையின் தற்படியாக அமையப் பெறுகிறது. அச்சமென்பது பசி, தாகம், உடலின்பம் போன்ற இயற்கை உணர்ச்சியன்று. இயற்கையின் நுட்பங்களைப் புரிந்து கொள்ள இயலாத போது, இந்தச் செயற்கை உணர்ச்சியான அச்சம், வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், மனித இன எதிரிகளால் நன்றாக உரமூட்டி வளர்க்கப்பட்டு வருகிறது.

சமூகத்தில் நங்கூரம் போல் இறுகிக் கட்டப்பட்டிருக்கும் அச்ச உணர்ச்சி, ஆதிக்க வர்க்கம் புரியும் திசை திருப்பலின் விளைவால் ஏற்பட்டதாகும். அநீதியை எதிர்க்காமல் பின்வாங்குதல் என்பது, அச்ச உணர்ச்சியால் ஏற்படும் கொடுமையான நோய். அச்சம் என்பது, மனிதர்கள் மீது செயற்கையாக வலிந்து சுமத்தப்பட்டு ஏற்கப்படும் பண்பாகும்.

ஆனால், மனிதர்களது வீரம், குஞ்சுகளைக் கொத்த வரும் பருந்துகளை எதிர்க்கும் தாய்க் கோழி போல இயற்கையானது. மனிதருக்குள் அச்சம் வீரம் இணைந்தே இருக்கின்றன. வரலாற்றில் மனித வீரம் நேரிய சாதனைகளையே செய்திருக்கிறது. எனவேதான் வரலாற்று வளர்ச்சிகளின் முழுப்பயனையும் நுகர்வோர், தங்கள் வாழ்வு நலன்களைக் கட்டிக் காக்க மனிதருள் அச்சத்தைப் புதைக்கின்றனர். அச்சத்திற்குக் கட்டுப்பட்ட பிறகு, மனிதர்களது அகமும் முகமும் சிதைக்கப்படுகின்றன. மனித இன வரலாற்றில் சுயநல ஆசையிலிருந்து மட்டுமல்ல, அச்சத்திலிருந்து வெளிவரவும் முதன் முதலில் வழிவகுத்தவர் புத்தர் ஆவார்.

மலையை அல்லது பெரும் பாறாங்கல்லை உடைப்பதற்கு ஏதேனும் ஓரிடத்தில் உளியையோ, வெடியையோ வைக்க வேண்டியிருக்கிறது. எந்த இடத்தில் வெடி வைத்தால் உடைப்பதற்கு எளிதாக - பரவலாக வெடிப்புகள் விழும் என்பதைத் தெரிந்து வைக்க வேண்டும். மானுடத்தின் எதிர்மறைகளுக்கு எதிராக இந்த வியூகத்தை முதன் முதலில் கற்றுக் கொடுத்தவர் புத்தரே ஆவார். எங்கெல்லாம் மனிதர்கள் தம் ஆராய்ச்சி அறிவை இழந்து விடுகின்றனரோ, அங்கெல்லாம் ஆதிக்கத்தை வழிபடும் உணர்ச்சி இயல்பாகத் தோன்றி விடுகிறது. மனிதனின் சுயநல உணர்ச்சியும், பாதுகாப்பு உணர்ச்சியுமே வழிபாட்டு மனநோய்க்கு அரண்களாகி விடுகின்றன. மனிதர்கள் இந்த நோயிலிருந்து மீள முடியுமா? உறுதியாக மீள முடியுமென்று, மீட்சிக்கான வழியாக இருந்து, மானுடத்தை வழி நடத்தியவர் தான் புத்தர்.

புத்தர் மீட்சிக்கான வழியை, நாம் எப்படி வாழ வேண்டும் என்ற கேள்விக்கான விடையிலிருந்து தொடங்கினார். எப்படியும் சாகப் போகிறோம். எனவே, சமூக பயங்கரவாதங்களோடு மோதிவிட்டுச் சாவோம் என்ற கடமையை நோக்கி வாழ்க்கையைத் தொடங்க கற்றுக் கொடுத்தவர் புத்தர். அவர் கற்றுக் கொடுத்த வாழ்க்கையை நோக்கி வாழப் புறப்பட்டவர்கள் தான் - அச்சத்தின் நோயிலிருந்தும் வழிபாட்டின் மனநோயிலிருந்தும் மீள முடியும்; மற்றவர்கள் மீளுவதற்கும் துணைபுரிய முடியும்.

இத்துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை, சமூக பயங்கரத்தையும், வழிபாட்டு உணர்ச்சி என்ற மனித இயல் குறைபாட்டையும் - பல நிலைகளில் கெட்டிப்படுத்தியது பார்ப்பன வேத (இந்து) மதமே ஆகும். இந்த பார்ப்பன - பார்ப்பனியக் கருத்தியலை அதன் மூலத்திலேயே முற்றுகையிட்டு, மக்களின் மனத்தில் கனறும் அச்சாம்பலால் மூடப்பட்டிருந்த வீரத்தை வெளியே கொண்டு வந்த முன்னோடி புத்தரே ஆவார். இயற்கையை உள்ளது உள்ளவாறே புரிந்து கொள்ள வேண்டும். அதைக் கயமை மனதோடு கூடிய கற்பனைத்திறன் கொண்டு முரண்பாடான அர்த்தத்தைக் கற்பித்து, அதற்குள் மக்களைச் சிக்க வைத்து மண்டியிடச் செய்யக் கூடாது என்றார் புத்தர். ஒரு தலைமுறையினரின் தவறான நம்பிக்கை, இனம் புரியாத அச்சம், ஒன்றிக் கொண்டிருக்கும் அறியாமை, பல தலைமுறைகளுக்கும் தொடரும். அதனால் பல தலைமுறை தொடர்ந்து கெடும் என்று எச்சரித்தார் புத்தர்.

தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்க வழக்கம் என்பதற்காகவோ - நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டதனால் அது புனிதமானது என்பதற்காகவோ - தாய் - தந்தையர், ஆசிரியர் சொல்லியது பற்றி நடந்தது என்பதற்காகவோ - எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற புத்தர், நம்டைய அறிவார்ந்த சிந்தனை எப்படி வழி நடத்துகிறதோ, அதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்; நமக்கு நம்முடைய அறிவுதான் வழிகாட்டி என்றார்.

மனிதர்கள் உண்மையையும், மெய்யான உண்மையையும் அறிய வேண்டும். அவர்களுக்குச் சுதந்திரம் மிக மிக அவசியமானதாகும். உண்மையைக் கண்டறிய ஒரே வழி கருத்துச் சுதந்திரமே என்றார் புத்தர். மனிதர்களின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? அவை வானிலிருந்து விழுகின்றனவா இல்லை, மூளையில் இயல்பாக உள்ளனவா? அவை சமுதாய நடைமுறையிலிருந்து மட்டும்தான் தோன்றுகின்றன என்றார். மனிதர்களை அவர்களின் மனம் எத்தன்மை உடையதாய் ஆக்குகிறதோ அப்படியே அவர்களாவார்கள்.

மனதின் நன்மையை நாடும் பயிற்சியே அறவழியின் முதற்படிக்கட்டு என்றார் புத்தர். மனிதன் சிந்தனை, அவனியிலிருந்து புறப்பட்டு, கடவுள்களின் உலகத்தை நோக்கி திருப்பப்படுவதை புத்தர் தடை செய்தார். மனிதர்களின் தேடலை உள்நோக்கி வழிநடத்தி, அவர்களுக்குள்ளேயே ஆற்றலை உணரச் செய்தார்.

உலகின் எல்லா மதங்களும் அதனதன் வர்க்க நலன்களுக்கேற்ற வகையில் ஒழுக்கத்தைப் போதிக்கின்றன. ஆனால், ஒழுக்கம் அவைகளின் அடிப்படையல்ல. ஒழுக்கமென்பது, மதம் என்ற எஞ்சினுடன் இணைக்கப்படும் தொடர்வண்டிப் பெட்டி போலத் தான். தேவைக்கேற்ப அது இணைக்கப்படும்; கழற்றப்படும். உண்மையில் மதத்தில் ஒழுக்கத்திற்கு இடமேயில்லை. உலகம் பிரம்மனாலோ, ஈசுவரனாலோ படைக்கப்பட்டிருந்தால் மக்களுக்கு கவலைகளும் தொல்லைகளும் ஏன் ஏற்படுகிறது? நன்மை, தீமை இரண்டுக்குமே கடவுளர்கள் பொறுப்பாளிகள் என்றால், அவர்களைவிட மோசடிக்காரர்கள் யார் இருக்க முடியும்? பிரம்மன், ஈசுவரன் என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறியுங்கள் என்றார் புத்தர்.உலகின் எல்லா மதங்களும் அதனதன் வர்க்க நலன்களுக்கேற்ற வகையில் ஒழுக்கத்தைப் போதிக்கின்றன. ஆனால், ஒழுக்கம் அவைகளின் அடிப்படையல்ல. ஒழுக்கமென்பது, மதம் என்ற எஞ்சினுடன் இணைக்கப்படும் தொடர்வண்டிப் பெட்டி போலத் தான். தேவைக்கேற்ப அது இணைக்கப்படும்; கழற்றப்படும். உண்மையில் மதத்தில் ஒழுக்கத்திற்கு இடமேயில்லை. உலகம் பிரம்மனாலோ, ஈசுவரனாலோ படைக்கப்பட்டிருந்தால் மக்களுக்கு கவலைகளும் தொல்லைகளும் ஏன் ஏற்படுகிறது? நன்மை, தீமை இரண்டுக்குமே கடவுளர்கள் பொறுப்பாளிகள் என்றால், அவர்களைவிட மோசடிக்காரர்கள் யார் இருக்க முடியும்? பிரம்மன், ஈசுவரன் என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறியுங்கள் என்றார் புத்தர்.

உலகின் துன்பங்கள் அனைத்தின் ஊற்றுக் கண்ணும் அயோக்கியத்தனம் என்பதைக் காட்டிலும், குருட்டு விசுவாசமென்னும் முட்டாள்தனமாகவே உள்ளது.'' புத்தர் இதை அனுமதிக்கவே இல்லை. “ஒருவருக்கு தன்னுணர்வு இருப்பின் அவர் தன்னை வெல்லட்டும்'' என்றார். ஒருவர் தனக்குத்தானே முழுமையில் தற்காப்போன் ஆவார்; வேறொரு காப்பாளர் யாருக்க முடியும்? தன்னைத் தான் தற்காக்கின்; பெறற்கய காவலை ஒருவர் பெற்றவனாகிறார் என்றார்.உலகின் துன்பங்கள் அனைத்தின் ஊற்றுக் கண்ணும் அயோக்கியத்தனம் என்பதைக் காட்டிலும், குருட்டு விசுவாசமென்னும் முட்டாள்தனமாகவே உள்ளது.'' புத்தர் இதை அனுமதிக்கவே இல்லை. “ஒருவருக்கு தன்னுணர்வு இருப்பின் அவர் தன்னை வெல்லட்டும்'' என்றார். ஒருவர் தனக்குத்தானே முழுமையில் தற்காப்போன் ஆவார்; வேறொரு காப்பாளர் யாருக்க முடியும்? தன்னைத் தான் தற்காக்கின்; பெறற்கய காவலை ஒருவர் பெற்றவனாகிறார் என்றார்.

பரிசீலனை என்பது கருத்தரித்து பத்து திங்கள் காத்திருப்பதற்கு ஒப்பானது. பிரச்சனையைத் தீர்ப்பது என்பது பிரசவ தினத்திற்கு நிகரானது. குறையற்றதென ஏதுமில்லை. இறுதியானது என ஏதுமில்லை. அனைத்தும் மறுபசீலனைக்கும், மறு சோதனைக்கும் உள்ளாக்கப்பட வேண்டும். மறுசோதனைக்கும் அவசியம் எழும் போதெல்லாம் மறுபசீலனை அவசியம் என்றார் புத்தர்.

மக்கள் மத்தியில் நாகரீகமும் தொடங்கிய காலத்தில் மக்களை முட்டாள்களாக்கி அடிமைகளாகச் செய்யவும், தங்கள் சொந்த நலன்களைப் பெருக்கி உரிமை - உடைமை - ஆண் முதலாளிகளாகவும், சில ஏமாற்றுக்காரர்களால், மனித அவமதிப்புக்காரர்களால், உழைப்புச் சுரண்டல்காரர்களால் உருவாக்கப்பட்டதே கடவுள் ஆகும். நமது அறிவுக்கு மேற்பட்ட ஆற்றல் என்று ஒன்று இல்லவே இல்லை. நன்மைக்கும் தீமைக்கும் நமது அறியாமையே முழு முதற்காரணம். பட்டறிவு மூலம்தான் அவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும் என்று மொழிந்த புத்தர் உலகத்திற்குப் பாதுகாவலரோ, பேணுபவரோ என்பதாக ஒருவரும் இல்லை என்றார். உலகமென்பது இடையறாது இயங்கிக் கொண்டும், அதே சமயம் மாறிக் கொண்டும் உள்ளது. மாற்றம் என்பதே உலகத்தின் பொதுவிதி என்றும் புத்தர் அறிவித்தார்.

அறவொழுக்க ரீதியிலான சர்ச்சைகளிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட புத்தருக்கு, கடவுளின் தேவை ஏற்படவே இல்லை. கடவுளுக்கு ஒழுக்கத்தில் பங்கு இல்லை என்பதுதான் புத்தரின் முடிந்த முடிவு. இவ்வுலகில் கருணையே இல்லாமல் சில அடிதூரம் நடப்பவன், தானே தனக்குக் கோடித் துணி உடுத்திக் கொண்டு தனது சவத்தைத் தானே புதைக்கப் புறப்பட்டவன் ஆவான். ஆனால், கருணையே வடிவான புத்தர், ஒருவர் எல்லோருக்காகவும்; எல்லோரும் ஒருவருக்காகவுமான மானுட வரலாற்றில் எங்கெல்லாம் மனிதர்கள் தங்கள் ஆராய்ச்சி அறிவை இழந்திருந்தார்களோ, அங்கெல்லாம் வழிபாட்டு உணர்ச்சிக்கு அடிமையாக இருந்தார்கள். அச்சம் என்பது, மனிதர்கள் மீது ஆதிக்க மனிதர்களால் செயற்கையாக வலிந்து சுமத்தப்பட்டு ஏற்கச் செய்யும் ஓர் இழிவான செயலாகும்.

ஒழுக்க விதிகள் மனிதருக்கு நன்மை புரிபவையாகவும், அவை கடவுள் விருப்பத்தின் விளைவுகளாகவும் சொல்லப்படுகின்றன. கடவுளே உலகைப் படைத்தவர் - கடவுளே அதை ஆள்பவர் - கடவுளே பவுதீக விதிகளுக்கும் ஒழுக்க நெறிகளுக்கும் கர்த்தா என்கிறார்கள். மனிதர்கள், அவர்களைப் படைத்த கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அந்தக் கீழ்ப்படிதலே ஒழுக்க நியதியை நிர்வகிக்கிறது என்கிறார்கள். ஒழுக்க விதி கடவுளிடமிருந்து தோன்றியதென்றால், கடவுளே ஒழுக்க நியதியின் தொடக்கம் என்றால், மனிதர்கள் கீழ்ப்படியாமல் தப்பிக்க முடியாதென்றால், ஏன் இந்த உலகில் ஒழுக்கச் சீரழிவு மிகுந்துள்ளது என புத்தர் வினவினார். ஒழுக்க நியதி மனிதர்களைப் பொறுத்ததேயன்றி வேறெதையும் பொறுத்ததல்ல. ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏதாவதொரு மனிதச் செயல்பாட்டாலோ, இயற்கை இசைவாலோ விளைவதே என்றார் அவர்.

கடவுள்தான் உலகத்தைப் படைத்தார் என்று யாராலும் நிரூபிக்க முடியாது. உலகம் பரிணமித்ததே அன்றி படைக்கப்பட்டதல்ல. கடவுளை அடிப்படையாகக் கொண்ட எந்த மதமும் யூகத்தை அடிப்படையாகக் கொண்டதேயாகும். எனவே, கடவுளை அடிப்படையாகக் கொண்ட எந்த வழியும் ஏற்பதற்கு உரியதல்ல. அவை மூட நம்பிக்கையை உருவாக்குகிறது. புத்தர், கடவுள் நம்பிக்கை என்பதை மிகவும் அபாயகரமானதாய்க் கருதினார். ஏனெனில், கடவுள் நம்பிக்கை பூசையிலும், பிரார்த்தனையிலும் நம்பிக்கையை உண்டாக்குகிறது. பூசையிலும், பிரார்த்தனையிலும் கொண்ட நம்பிக்கை புரோகிதர் - பூசாரி நிலையைத் தோற்றுவிக்கிறது. புரோகிதர் -பூசாரி - குருமார் ஆகியோர் தீய புத்திசாலிகளாகி, மூடநம்பிக்கைகளை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் பகுத்தறிவு நோக்கின், சமநோக்கின் வளர்ச்சி முற்றாக அழிக்கப்படுகிறது என்றார் புத்தார்கடவுள்தான் உலகத்தைப் படைத்தார் என்று யாராலும் நிரூபிக்க முடியாது. உலகம் பரிணமித்ததே அன்றி படைக்கப்பட்டதல்ல. கடவுளை அடிப்படையாகக் கொண்ட எந்த மதமும் யூகத்தை அடிப்படையாகக் கொண்டதேயாகும். எனவே, கடவுளை அடிப்படையாகக் கொண்ட எந்த வழியும் ஏற்பதற்கு உரியதல்ல. அவை மூட நம்பிக்கையை உருவாக்குகிறது. புத்தர், கடவுள் நம்பிக்கை என்பதை மிகவும் அபாயகரமானதாய்க் கருதினார். ஏனெனில், கடவுள் நம்பிக்கை பூசையிலும், பிரார்த்தனையிலும் நம்பிக்கையை உண்டாக்குகிறது. பூசையிலும், பிரார்த்தனையிலும் கொண்ட நம்பிக்கை புரோகிதர் - பூசாரி நிலையைத் தோற்றுவிக்கிறது. புரோகிதர் -பூசாரி - குருமார் ஆகியோர் தீய புத்திசாலிகளாகி, மூடநம்பிக்கைகளை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் பகுத்தறிவு நோக்கின், சமநோக்கின் வளர்ச்சி முற்றாக அழிக்கப்படுகிறது என்றார் புத்தார்

மதத்தின் மய்யப்புள்ளி மனிதர்களுக்கும் கடவுளர்களுக்கும் இடையிலான உறவு பற்றியதாக இருக்கக்கூடாது என்பதே புத்தன் கருத்தாகும். மதம் என்பது, மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு பற்றியதாக இருக்க வேண்டும். எல்லோரும் இன்புறும் நோக்கில் ஒருவர் மற்றொருவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பிப்பதே மதத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார் புத்தர்.

“உலகம் என்பது இடை யறாது இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் உள்ளது. உலகிற்குப் பாதுகாவலோ, பேணுபவரோ ஒருவருமில்லை. நமக்குரியது ஏதுமில்லை; நமக்குப் பிறகு நாம் அனைத்தையும் விட்டுச் செல்கிறோம். உலகம் குறைபாடு உடையதாய், சுயநிலம் மிக்கதாய், அடிமைப்படுத்துவதாய், அவாவுற்றதாய் உள்ளது என்ற வரையறையினைத் தந்த புத்தர் என்னிடம் தங்கமோ, வெள்ளியோ வேறெந்த செல்வமோ இல்லை. ஆனால், தூய வாழ்வுக்குரிய நற்செல்வங்கள் என்னிடம் உள்ளன. தூய வாழ்வுக்குய நன்னெறி, வாழ்க்கைப் பாதையே ஆகும். மனதைப் பண்படுத்தவும், மானுட இன்பங்களின் பேரின்பமான உன்னதத்தை அடையவும், ஒருவர் தம் வாழ்வை அர்ப்பணித்து பிறர் வாழ முயல வேண்டும் என்றார் புத்தர்.

புத்தரின் முதல் நோக்கம் பகுத்தறிவுப் பாதைக்கு வழிநடத்துவது. ஏனென்றால், பகுத்தறிவின் நீட்சியே பொதுவுரிமை - பொதுவுடைமையாகும். இரண்டாவது நோக்கம், உண்மையைத் தேடிச் செல்ல மக்களைச் சுதந்திர மனிதர்களாக்குவது. அவருடைய மூன்றாவது நோக்கம், மூடநம்பிக்கையின் பலமான மூலத்தை அதாவது எதையும் தீர விசாரித்தறியும் உணர்வைக் கொல்லும் தன்மையைத் தகர்த்தெறிவது ஆகும்.

இந்த பூமியில் மானுட வாழ்க்கைச் சூழல்கள், மனிதர்களோடு பிறந்த உணர்வின் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளுதல், அந்த உணர்வுகளின் உருவாக்கம், வரலாறு மற்றும் மரபுகளின் விளைவாக மனித உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், அவற்றால் மனிதர்களுக்கு விளையும் கேடுகள் ஆகியவை பற்றிய விசாரணை - ஆய்வு ஆகியவற்றால் விளைந்தது என்னும் பொருளில் புத்தரின் மார்க்கம் ஒரு புதிய கண்டுபிடிப்பேயாகும்.

பவுத்த நாத்திகத்தின் அய்ந்து முக்கியத் தத்துவங்கள்

இயற்கையாகக் காணப்படும் திடப் பொருள், அதனுள்ளிருக்கும் உயிரிகள், அதன் ஆற்றல் இவைகளினால்தான் உலகம் என்று சொல்லக்கூடியது ஆனது.*அனுபவங்களிலிருந்துதான் எல்லாவித அபிப்பிராயங்களும் தோன்றுகின்றன. ஆகையினால், கடவுளைப் பற்றிய ஓர் எண்ணத்தையோ அல்லது கருத்தையோ அல்லது காயத்தையோ மனிதர் கொள்ளவே கூடாது.*அவயங்களின் அமைப்புகள் கற்பனை செய்யப்பட்டவை அல்ல; இயற்கையின் கோரிக்கைகளின்படி அவை வேறு துணையின்றி விருத்தியானவை.*சர்வவல்லமை உள்ளவரும், மனிதர்களின் சுகத்தில் கவலை பூண்டு எப்பொழுதும் கவனித்துக் கொண்டு வருபவருமாகிய ஒருவர் உண்டு என்னும் எண்ணத்தை, உலகத்திலிருக்கக் கூடிய துன்பங்கள் - தீமைகள் பிரத்தியேகமான உண்மைகளால் தகர்த்தெறியப்பட வேண்டும்.*இவ்வுலகத்தில் இப்பொழுது ஒருவர் அனுபவிக்கக்கூடிய மகிழ்ச்சியும் இன்பமேதான் - அவருடைய நடத்தைகளின் நோக்கமாக இருக்க வேண்டும். இயற்கையாகக் காணப்படும் திடப் பொருள், அதனுள்ளிருக்கும் உயிரிகள், அதன் ஆற்றல் இவைகளினால்தான் உலகம் என்று சொல்லக்கூடியது ஆனது.*அனுபவங்களிலிருந்துதான் எல்லாவித அபிப்பிராயங்களும் தோன்றுகின்றன. ஆகையினால், கடவுளைப் பற்றிய ஓர் எண்ணத்தையோ அல்லது கருத்தையோ அல்லது காயத்தையோ மனிதர் கொள்ளவே கூடாது.*அவயங்களின் அமைப்புகள் கற்பனை செய்யப்பட்டவை அல்ல; இயற்கையின் கோரிக்கைகளின்படி அவை வேறு துணையின்றி விருத்தியானவை.*சர்வவல்லமை உள்ளவரும், மனிதர்களின் சுகத்தில் கவலை பூண்டு எப்பொழுதும் கவனித்துக் கொண்டு வருபவருமாகிய ஒருவர் உண்டு என்னும் எண்ணத்தை, உலகத்திலிருக்கக் கூடிய துன்பங்கள் - தீமைகள் பிரத்தியேகமான உண்மைகளால் தகர்த்தெறியப்பட வேண்டும்.*இவ்வுலகத்தில் இப்பொழுது ஒருவர் அனுபவிக்கக்கூடிய மகிழ்ச்சியும் இன்பமேதான் - அவருடைய நடத்தைகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.

நன்றி ஏ.பி. வள்ளிநாயகம்

புத்தர்

புத்தர் அறிவுச் சுதந்திரத்திற்காகவும், சமூக சுதந்திரத்திற்காகவும், பொருளாதாரச் சுதந்திரத்திற்காகவும், அரசியல் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டார். புத்தர் ஆண்களுக்கிடையில் மட்டும் சமத்துவம் வேண்டுமென்று கூறவில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் சமத்துவம் வேண்டுமென்று கூறினார். புத்தருடைய போதனைகள், மக்களுடைய சமூக வாழ்வில் ஒவ்வோர் அம்சத்தையும் உள்ளடக்கியதாயிற்று. அவருடைய கோட்பாடுகள் நவீனமானவை. புத்தருடைய முக்கிய நோக்கமானது, மனிதர்கள் இறந்த பிறகு ‘முக்தி' தருவது குறித்தல்ல; பூமியில் வாழும்போது மனிதர்களுக்கு விடுதலை என்பதாகும். சமத்துவம் என்பதுதான் பவுத்தத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். புத்தர் என்னுடைய பேராசான் ஆவார். - புரட்சியாளர் அம்பேத்கர்

கடவுளையும், மதத்தையும் மனிதர்கள்தான் கற்பித்தார்கள். மானுடத் தார்மீகத்தை விரட்டியடித்த ஒரு சின்னக் கும்பல் தங்களின் ஆதிக்கத்திற்காக அவ்வாறு கற்பித்தது. ஒரு குறிப்பிட்ட சமூக நிலைமையில் அவர்களின் தேவையையும், ஆக்கிரமிப்பையும் நிறைவு செய்வதற்காகவே கடவுளும் மதம் திணிக்கப்பட்டன. ஆனால் மதம், கடவுளும் புகுத்தப்படாத காலம் சாக்கியர்களின் காலமாக இருந்தது. சாக்கியர்கள் தங்கள் மானுட மதிப்பீட்டை நேர்மையில் இணைத்துக் கொள்ளும் முதிர்ந்த, தேர்ந்த அறபடைப்பாளிகளாகவே விளங்கினர். சாக்கியர்கள், நிச்சயமான உயர்ந்த ஓர் அமைப்பினை நோக்கித் தங்கள் இனக்குழு செல்கிறது என்பதை உறுதி செய்தனர். சாக்கியர்களின் வரலாறு நெடுக, பொருள் முதல்வாதத்தின் பதாகையில் முன்னேற்றம் என்பது பொறிக்கப்பட்டிருந்தது.

சாக்கியர்கள் நாகரிகத்தை வளர்த்தனர். அது கலை இலக்கியத்தையும், மருத்துவத்தையும், கணிதத்தையும் வளர்த்தது. அறிவு என்பது சாக்கியர்களைப் பொறுத்தவரை, இயற்கையைப் புரிந்து கொள்வதுதான். ஆனால், கருத்து முதல்வாதிகளைப் பொறுத்தவரை அறிவு என்பது பரம்பொருளைப் புரிந்து கொள்வதே. இது இயற்கை உண்மைக்கு மாறானது; மாயையானது. உண்மையானதும் நிரந்தரமானதும் இதை உணர்தல் மட்டும்தான். சாக்கியர்களின் காலம், தத்துவத் தளிர் நடையின் அற்புதமான ஆகர்சிக்கும் தன்மை கொண்ட காலமாக இருந்தது. தத்துவம் கோட்பாடு ரீதியில் விசயங்களை ஆழமாக ஆராய்ந்து அறிவியல் கண்ணோட்டத்தில் தங்களுடைய சொந்த அறிவு நிலையை உயர்த்திக் கொண்டார்கள். சமகால வரலாற்று உணர்வு, கருத்தியல் வரலாற்றை நிர்ணயிக்கும் சக்திகளின் திசை வழி ஆகியவை பற்றிய தெளிவுடன் இயங்கக் கடமைப்பட்டிருந்தார்கள்.

மானுடத்திற்கு அறம் உன்னதமானது. அதன் உயரத்திற்குமேல், உயரம்கூடிய உன்னதம் மிக்க வேறெதுவுமில்லை. அறம் முன்னிலைப்படுத்தப்படுவதும், அதை தொழிற்படுத்துவதும் மனிதமாண்புகளுக்காகத்தான். சாக்கியர்களுக்கு கடந்த கால சுவாசத்திற்கும் நிகழ்கால சுவாசத்திற்கும் நிகழ்ச்சி நிரலாக அறமே இருந்தது. அவர்களின் மானுட அர்த்தம் நோக்கிய முன்னெடுப்பில் லோகாயதம், சாங்கியம் போன்றவைகளே அணிவகுத்திருந்தன. சாக்கியர்கள் தேர்வுக்குரிய தத்துவத் தகுதிகளைக் கொண்டவர்கள் என்பதால், தங்களுக்குள் மனிதாம்சத்தையே வரவேற்கும் திறன் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களின் மூலாம்பரத் தத்துவ மொழியின் சாயலும் தனித்தன்மையும் மேலும் வளர்ச்சி நிலைக்கு வந்து சேரும் விதத்தில் பவுத்தம் தத்துவமயமாக்கம் ஆனது.

தத்துவங்களில் முன் வரிசையில் நிற்பது பவுத்தம்தான். கிரேக்கத்தின் மிக மூத்த எபிகுரஸ் தத்துவம் தொடங்கி, உலக அளவிலான தத்துவ இயலைச் சற்று ஆழ்ந்து பார்த்தோமானால், பவுத்த தத்துவ இயல் மிகவும் ஆழமான, அகலமான, அற்புதமான தத்துவ நெறியைக் கொண்டிருப்பதை அறிய முடியும். லோகாயதம், சாங்கியம் அது சார்ந்த தத்துவ இயல்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், அனேகமாக பொருள் முதல்வாதம் பேசும் தத்துவங்களில்கூட, கருத்து முதல்வாதம் இலைமறைக்காயாக இருப்பது தெரியவரும். பொதுவுடைமையின் ஆசான்களான காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் மார்க்சியம் இதில் விதி விலக்கு. சாக்கியர்கள், ஒரு தலைமுறையிடமிருந்து இன்னொரு தலைமுறைக்கு தங்கள் தத்துவ அனுபவங்களைத் தொடருதல் என்பது நிகழ்ந்தே வந்திருக்கிறது. அனுபவங்களைத் தங்கள் உடல் வெளியிலும், மன வெளியிலும் தேக்கி வைத்ததின் வீரியமே பவுத்தத்தில் தங்களைக் கரைத்துக் கொண்டதற்கு ஏதுவாகப் போனது. அவர்களது நிலவெளிக்கான மானுடவியலான பவுத்தம், அவர்களின் பாரம்பரியம் சார்ந்துதான் உதயமானது.தத்துவங்களில் முன் வரிசையில் நிற்பது பவுத்தம்தான். கிரேக்கத்தின் மிக மூத்த எபிகுரஸ் தத்துவம் தொடங்கி, உலக அளவிலான தத்துவ இயலைச் சற்று ஆழ்ந்து பார்த்தோமானால், பவுத்த தத்துவ இயல் மிகவும் ஆழமான, அகலமான, அற்புதமான தத்துவ நெறியைக் கொண்டிருப்பதை அறிய முடியும். லோகாயதம், சாங்கியம் அது சார்ந்த தத்துவ இயல்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், அனேகமாக பொருள் முதல்வாதம் பேசும் தத்துவங்களில்கூட, கருத்து முதல்வாதம் இலைமறைக்காயாக இருப்பது தெரியவரும். பொதுவுடைமையின் ஆசான்களான காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் மார்க்சியம் இதில் விதி விலக்கு. சாக்கியர்கள், ஒரு தலைமுறையிடமிருந்து இன்னொரு தலைமுறைக்கு தங்கள் தத்துவ அனுபவங்களைத் தொடருதல் என்பது நிகழ்ந்தே வந்திருக்கிறது. அனுபவங்களைத் தங்கள் உடல் வெளியிலும், மன வெளியிலும் தேக்கி வைத்ததின் வீரியமே பவுத்தத்தில் தங்களைக் கரைத்துக் கொண்டதற்கு ஏதுவாகப் போனது. அவர்களது நிலவெளிக்கான மானுடவியலான பவுத்தம், அவர்களின் பாரம்பரியம் சார்ந்துதான் உதயமானது.

சாக்கிய இனக்குழு கட்டுமானத்தின் வெட்டவெளிச்சமான பவுத்தத்தின் தாயும் தந்தையுமானவர் புத்தர். மானுட வரலாற்றின் புகழ்மிக்க பக்கங்களைப் புரட்டுகின்றபோது, மகத்துவமிக்க கம்பீரத்தோடு நம்முன் புத்தர் வருகிறார். கி.மு. 6 - 5 நூற்றாண்டுகளில் கால் வைத்து வாழ்ந்தவர்தான் புத்தர். இத்துணைக்கண்டம் முழுவதும் ஆசியாவிலும் ஏன் இந்த மானுட உலகம் முழுவதும் பரவிய ஓர் இயக்கத்தின் தத்துவத்தின் தலைசிறந்த ஞானியாக விளங்கியவர் புத்தர்.

வரலாற்றில் இம்மாதியான ஓர் இயக்கம், மானுடவியலின் அடிப்படையில் வேறு எங்கும் என்றும் காணப்பட்டதில்லை. புத்தத் தத்துவம் அல்லது பவுத்தம், தொடக்க காலத்தில் உலகத்தை அணுகிய முறை சாக்கிய இனக்குழு மக்கள் அத்தத்துவ இயக்கத்திற்கு அளித்த மதிப்பு; அதன் அடிப்படைக் கொள்கைகள் அனைத்தையும் இன்றைக்கு பவுத்தக் கோட்பாடுகள் என்று சொல்லப்படும் கருத்துகளை காயங்களை வைத்து மதிப்பிடவே கூடாது. பவுத்தம் என்று அர்த்தப்படு வதற்கும் ஆரம்ப காலத்தில் இருந்ததற்கும், ஒட்டும் உறவும் இல்லை என்று கூறினாலும் அது மிகையாகாது. பவுத்தத்தை பார்ப்பனியத்திற்கு வழங்குவதான நிலை, பார்ப்பன பார்ப்பனிய ஊடுருவலால் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பவுத்தத் தெறிப்பு இன்னும் சாக்கிய இனக் குழுக்களின் வாரிசுகளாக வீறு பெற்றிருக்கும் தலித் மக்களிடம் தங்கியுள்ளது. தலித் மக்களின் மனங்களில் இருக்கும் படிமம் பவுத்தமே ஆகும். பவுத்தத்தை அபூர்வமான மானுட சக்தியாகவும், புதிய உயிராகவும் நிரப்பிக் கொள்ள வேண்டிய கடமையே தலித் மக்களுக்கு காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தர், இம்மண்ணின் பூர்வ குடியான சாக்கிய இனக்குழுவைச் சேர்ந்தவர். சாக்கியக் குடியில் தனியுரிமை தனியுடைமை இல்லை. புத்தருடைய உள்ளத்தில் நிறைந்திருக்கும் கொள்கையும் அதுவே. புத்தர், தன் இனக்குழு சமுதாயத்தின் வழிநின்று மானிடர் அனைவரும் சமம் என்பதைக் கொண்டார். அவருடைய காலகட்டத்தில் இருந்தவர்களுக்கும் (சாக்கியர்களுக்கும்) வந்தேறியவர்களுக்குமான (பார்ப்பனர்களுக்கும்) தோன்றிய முரண்பாடுகளும் மோதல்களும் அவருடைய உள்ளத்தில் பிரதிபலித்ததின் எதிரொலிதான் பவுத்தம்.

அன்றைய சாக்கியப் பழங்குடியரசுகள் பல்வேறு கணங்களின் (குலங்களின்) தொகுப்புகளாக விளங்கின. ஒவ்வொரு கணத்திற்கும் ஒரு தலைவர் இருந்த போதிலும், குடியரசின் பொதுத் தலைவர் சுழற்சி முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்ந்தெடுக்கப்படுவார். கணத் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு தேர்வு செய்யப்படுவார். தவிர்க்க முடியாமல் போர் என்றால் அனைவரும் ஆயுதம் தக்கக்கூடிய நிலை இருந்ததேயொழிய, போருக்கென தனியான ராணுவ அமைப்போ, இனக்குழு நிர்வாகத்திற்கென பிரபுத்துவ தலைமையோ இல்லை. நிர்வாகம் மற்றும் வழக்கு விசாரணைகள் முதலியன ‘சந்தாகாரம்' எனப்படும் பொது அவையில் விவாதித்தே முடிவெடுக்கப்பட்டது. சாக்கியப் பழங்குடியினன் இத்தகைய பொது அவை ஒன்றிற்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் புத்தரின் தந்தை சுத்தோதனர்.

சாக்கிய இனக்குழுச் சமுதாயம் சமத்துவம் மிக்கவையாகவும், தனியுரிமை தனியுடைமை வேட்கை அறியாததாகவும், இனக்குழு மக்களின் கருத்து ஒருமிப்பு அடிப்படையில் செயலாற்றக்கூடிய புராதனச் சமூக ஜனநாயகம் கொண்டதாகவும் விளங்கியது. சுரண்டலின் மூலமான சொத்துகளையும், அவமதிப்பின் மூலமான ஏற்றத் தாழ்வுகளையும் நிலைநிறுத்தக் கூடிய கருத்துகளும் மதிப்பீடுகளும் எதுவும் இல்லாதவையாகவும் விளங்கின. சாக்கியர்களின் இனக்குழு சமூக அமைப்பு, புராதனப் பொதுவுமை பொதுவுடைமைச் சமூகங்களாகவே விளங்கியது.

மக்களுக்கான தலைமையும், வழிமுறைகளும், வெளிப்பாட்டு முறையும் பார்ப்பனர்களுக்கும் சாக்கியர்களுக்கும் முற்றிலும் வேறுவேறானவை. பார்ப்பன மரபு தலைவர்களையும், சாக்கிய மரபு தலைவர்களையும் ஒருபோதும் பொதுமைப்படுத்திவிட முடியாது. பார்ப்பன மரபில் போரைத் தலைமையேற்று வழி நடத்திச் செல்வது அரசனின் தற்கடமையாகும். அரசன் இல்லாதவர்கள் போல் வெற்றி பெற இயலாது; எதிரிகளை (சாக்கியர்களை) வெல்ல முடியாது. பார்ப்பனிய அய்தீகத்தின்படி, ஒருவன் அரசனாக அங்கீகாரம் பெறுவதற்கு கடவுளின் இசைவு வேண்டும். எல்லாம் வல்ல கடவுளே அரசனுக்கு மூலமானவன். அரசன் மக்களுக்குச் சமமானவன் அல்ல. மக்களுக்கான கருத்தியல் அடிப்படையில் செயல்பட வேண்டிய எவ்வித நிர்பந்தம் இல்லாதவன். அரசன் என்பவன் பார்ப்பன வேத மதத்தை நிலை நிறுத்தக்கூடியவன். பார்ப்பனிய மநுதர்ம சாத்திரங்களின்படி ஆட்சி நடத்தக் கடமைப்பட்டவன்

சமத்துவம், புராதனச் சமூக ஜனநாயகம் கூடிய பொதுவுரிமை பொதுவுடைமை இனக்குழு குடியரசே சாக்கியர்களின் குடியரசு ஆகும். மக்களின் தலைவர் என்பவர் கண விரும்பி / குல விரும்பி இனக்குழுத் தோழர் ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்ட இனக்குழுவின் தலைவர் ‘ராஜா' ‘மன்னர்' என அழைக்கப்பட்டாலும், பார்ப்பனிய மரபு முடியரசுக்குரிய அதிகாரங்கள், ஆடம்பரங்கள், பரம்பரை வாரிசுரிமைகள் எதுவும் சாக்கிய மன்னருக்குக் கிடையாது. இத்தகைய மக்கள் அரசியல் மாண்பில் கரைந்த சாக்கிய இனக்குழுவிற்கு, சுழல்முறையில் தலைவர் பதவிக்கு வந்த சுத்தோதனர், மாயாதேவியைத் தன் துணைவியாக்கிக் கொண்டார். பார்ப்பனர்களின் வரையறைபோல சாக்கிய இனக்குழுக்களின் அரசு என்பது கட்டமைக்கப்படவில்லை. அரசின் தலைவர் என்பவர் கடவுளுடன் முடிச்சிப் போடக்கூடியவர் அல்லர். அவர் இனக் குழுவின் ஏகோபித்த ஒத்திசைவுடன் மக்கட்பணிக்கு அமர்த்தப்படுபவர். அவருக்கு வழிகாட்ட சாக்கிய நெறிமுறைகள் இருந்தன. இனக்குழுவின் கருத்தொருமிப்பின் அடிப்படையிலேயே செயல் முறைமைகள் மிளிர்ந்தன. தலைவனுக்கென்று தனிமரியாதையும் தனித்ததொரு வாழ்வும் வளம் சாக்கிய அரசியலில் கிடையாது. சாக்கிய இனக்குழு இயல்பு வாழ்வின் சமத்துவ அறமாண்புகளை வளர்த்தெடுப்பதே தலைவன் முதலும் கடைசியுமானப் பணியாகும்.சமத்துவம், புராதனச் சமூக ஜனநாயகம் கூடிய பொதுவுரிமை பொதுவுடைமை இனக்குழு குடியரசே சாக்கியர்களின் குடியரசு ஆகும். மக்களின் தலைவர் என்பவர் கண விரும்பி / குல விரும்பி இனக்குழுத் தோழர் ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்ட இனக்குழுவின் தலைவர் ‘ராஜா' ‘மன்னர்' என அழைக்கப்பட்டாலும், பார்ப்பனிய மரபு முடியரசுக்குரிய அதிகாரங்கள், ஆடம்பரங்கள், பரம்பரை வாரிசுரிமைகள் எதுவும் சாக்கிய மன்னருக்குக் கிடையாது. இத்தகைய மக்கள் அரசியல் மாண்பில் கரைந்த சாக்கிய இனக்குழுவிற்கு, சுழல்முறையில் தலைவர் பதவிக்கு வந்த சுத்தோதனர், மாயாதேவியைத் தன் துணைவியாக்கிக் கொண்டார். பார்ப்பனர்களின் வரையறைபோல சாக்கிய இனக்குழுக்களின் அரசு என்பது கட்டமைக்கப்படவில்லை. அரசின் தலைவர் என்பவர் கடவுளுடன் முடிச்சிப் போடக்கூடியவர் அல்லர். அவர் இனக் குழுவின் ஏகோபித்த ஒத்திசைவுடன் மக்கட்பணிக்கு அமர்த்தப்படுபவர். அவருக்கு வழிகாட்ட சாக்கிய நெறிமுறைகள் இருந்தன. இனக்குழுவின் கருத்தொருமிப்பின் அடிப்படையிலேயே செயல் முறைமைகள் மிளிர்ந்தன. தலைவனுக்கென்று தனிமரியாதையும் தனித்ததொரு வாழ்வும் வளம் சாக்கிய அரசியலில் கிடையாது. சாக்கிய இனக்குழு இயல்பு வாழ்வின் சமத்துவ அறமாண்புகளை வளர்த்தெடுப்பதே தலைவன் முதலும் கடைசியுமானப் பணியாகும்.

இத்துணைக் கண்டத்தின் வடகிழக்கு மூலையில் இருந்த தேசம் சாக்கியர் இனக்குழு தேசமாகும். விவசாய இனக்குழுக்களைக் கொண்ட இத்தேசத்தின் தலைநகரமாக விளங்கியது கபிலவஸ்து ஆகும். சாக்கிய இனக்குழுவின் முன்னோடியான கபிலரை நினைவு கூர்ந்த கபில வஸ்துவின் தலைவரும் தலைவியும் ஆன சுத்தோதனர் மாயா தேவி இணையருக்குகோதமபுத்தர், கி.. 563 ஆம் ஆண்டு வைசாக பவுர்ணமி நாளில் பிறந்தார். சித்தார்த்தன் பிறந்த நாள், அனைத்துச் சாக்கிய இனமக்களாலும் கொண்டாடப்பட்டது. சாக்கியப் பழங்குடியின் தலைநகரமான கபிலவஸ்து, ரோகிணி ஆற்றங்கரையிலிருந்த நகர மாகும். சாக்கியர்களின் கருத்துப் பரிமாற்ற கபிலபுரமாக அது விளங்கிய தால், அந்நகரில் கோதமர் பிறந்த செய்தி வட புலத்தில் சாக்கிய உலகம் முழுவதும் ஆனந்தமாய் எதிரொலித்தது.

-நன்றி ஏ.பி. வள்ளிநாயகம்