Tuesday, December 4, 2007

நான் விஞ்ஞானி இல்லை கோமாளிதான் !! கலாம்

நான் விஞ்ஞானி இல்லை கோமாளிதான் !! கலாம்-இன் ஒப்புதல் வாக்குமூலம் !!
இன்று நாடு மறுகாலனியாக்கப்பட்டு வருவதன் உச்சக்கட்டம் தான் அணுசக்தி ஒப்பந்தம் , இந்தியாவின் அரைகுறை இறையாண்மையையும் காவு கேட்கிறது.
2005 இல் அமெரிக்காவுடன் போடப்பட்ட இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு சரத்து தான் இந்த 123 ஒப்பந்தம். 123 ஒப்பந்தம் உள்பட மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் (நாட்டை அன்னியனுக்கு விற்பதில்) ஒத்து ஊதி இருந்திட்டு இப்ப எதிர்க்கிற மாதிரி நடிக்கிற போலி கம்யூனிஸ்டுகளை போல ஒத்து ஊதின இன்னொரு சுகபோகி நம்ம அரசவை கோமாளி கலாம்.
..லட்சக்கணாக்கான விவசாயி தற்கொலை செய்த நாட்டில், 83 கோடி பேருடைய தினசரி வருமானம் ரூ 20 ஆக இருக்கும் நாட்டில் அனைத்தையும் மூடி மறைத்து இந்திய நாடு 2020 வல்லரசு ஆகிவிடும் என்று நாடு படுதீவிரமாக மறுகாலனியாக்கப்பட்டு வருவதை மூடிமறைத்த இந்த கோமாளியும் 2005ல் போடப்பட்ட அடிமை சாசனம் (123) பற்றி வாய் திறக்கவே இல்லை.
.இப்போது அடிமை சாசனம்(123) அமுல்படுத்த போகிற போது எதிர்க்கிற மாதிரி நாடகம் ஆடுகிற போலிகளை விட அப்பட்டமான அமெரிக்க அடிமை நாயாக காட்டி கொண்டு இருக்கிறார் கலாம்.
.விஞ்ஞானிகள், நாட்டுப்பற்றாளர்கள், பத்திரிக்கையாளார்கள் என அனைவரும் 123 என்பது ஒரு அடிமை சாசனம் என்று கிழித்து வருகின்ற இந்த சூழ்நிலையில்; கலாம் நேற்று 'அணுசக்தி ஒப்பந்தம் அபூர்வமானது; முக்கியமானது' என்று கூறி தான் ஒரு கோமாளிதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இந்த ஆளு விஞ்ஞானியாக இருந்திருந்தால் "அடிமை சாசனம்" பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கும். கோமாளி யாச்சே ! அதுனால தான் ஒப்பதத்தைப் பற்றியோ அதனுடைய சரத்துகளைப் பற்றியோ வாய்திறக்காமல் ஒப்பந்தம் முக்கியமானது என்று 'மண்' மோகன் சப்பைக்கட்டுகளை விட கேவலமாக சப்பைக்கட்டு கட்டுகிறார்.
இதை விட அபாயகரமானது கோமாளியின் ' 2020 வல்லரசு' கனவு !
நாட்டின் நிலை என்னவென்றே தெரியாமல் பேசுகிறார் கலாம். மறுகாலனியாதிக்கத்துக்கு உதரணமாக சென்னையை எடுத்துக் கொண்டால் -
சென்னை குடிசைகளில் 86% பேர் ஒரு வேளைதான் சாப்பிட்டு வருகிறார்கள்..
44% குடிசைப்பெண்கள் ரத்த சோகையால் செத்துக்கொண்டிருக்கிறார்கள்...ஆட்சியாளர்களோ நிமிட்ஸ் கப்பலில் வந்திறங்கும் அமெரிக்க கொலையாளிகளுக்கு கோடம்பாக்கத்து துணைநடிகைகளைக் கூட்டிக்கொடுத்துக் காவல் நிற்கிறார்கள்
சென்னை குடிசைகளில் 21 சதவீதம் இளைஞர்களுக்கு ஒரு வேளை பட்டினிதான் பரிசாகக் கிடைக்கிறது.
நகர விரிவாக்கம் என்று அவர்களில் 75000 குடும்பங்களை சென்னையை விட்டுத் துரத்த உத்தரவு போடுகிறது உலக வங்கி..
இப்ப வேலை கொடு என்கிற மக்களை பார்த்து அணுகுண்டு தர்றேன் என்கிறார்கள் ஆட்சியாளர்கள்;
கனவு காணச்சொல்லுகிறார் கலாம்.
இப்படிப்பட்ட கோமாளியின் யோசனைகளை வைத்தும் சிலர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்க (மக்களை கொள்ளையிட) கிளம்பி இருப்பது; கலாம் ஒப்புதல் வாக்குமூலத்தை விட நாட்டிற்கு அவர் ஏற்படுத்திய '2020' அபாயம் பயங்கரமானது என்பதை காட்டுகிறது.


Monday, December 3, 2007

ஆன்லைன் கோப்புவகை மாற்றி

ஆன்லைனிலேயே உங்கள் கோப்புகளை ஒரு வகையிலிருந்து இன்னொரு வகைக்கு மாற்றலாம்.(I mean file format.For instance wma to mp3 or avi to 3gp (3gp-வீடியோவகை தான் மொபைல் போனில் பயன்படுத்தப்படுகிறது).இது ஒரு இலவச சேவை.எந்த ஒரு மென்பொருளும் இறக்கம் செய்யவோ அல்லது நிறுவவோ தேவை இல்லை.5 image formats, 14 document formats, 11 video மற்றும் 9 audio formats -ல் விளையாடலாம்.100 MB கோப்பு வரை பயன்படுத்தலாம்.கோப்பு இருக்கும் இடத்தை Browse-ல் காட்டி விட்டு விட்டு நீங்கள் output format-ஐ சொல்லிவிட்டால் மிச்சத்தை Zamar server பார்த்துக்கொள்ளும்.வகை மாற்றம் செய்யப்பட்ட கோப்பை இறக்கம் செய்ய சுட்டி உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும்.ஆன்லைனில் என்னலாமோ செய்கிறார்கள் போங்கள்.http://www.zamzar.com/

Thursday, November 29, 2007

உலக அளவில் ஒரே கரன்சி

Globalization அதாவது உலகமயமாக்கலின் தாக்கம் இன்று எல்லாராலுமே உணரப்படுகின்றது. வால்ஸ்டிரீட்டின் நெளிவு சுழிவுகள் உலக பங்குசந்தைகளில் எதிரொலிக்கின்றன. ஈரானில் போர் மேகம் சூழ்ந்தால் சீனாவில் பெட்ரோல் விலை ஏறுகின்றது. அமெரிக்காவில் Day Light Saving Time மாற்றப்பட்டால் சென்னையில் கால் சென்டரில் வேலை செய்யும் மனோஜ் சீக்கிரமாக வேலைக்கு போக வேண்டியுள்ளது. இப்படி வீடுவரை குடிவந்துள்ள உலகமயமாக்கல் பாதி கிணறே தாண்டியுள்ளதால் தாம் இன்றைய உலக எக்கானமி தடுமாறுகின்றது என்கின்றது ஒரு ஆய்வு. அதாவது இன்று Economic imbalance, Economic instability பிரபலமான வார்த்தைகள்.இதற்க்கெல்லாம் தீர்வு அரைவேக்காட்டு தனமாய் உள்ள உலகமயமாக்கலை முழுதாக்க வேண்டுமாம். அதாவது ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து யூரோ எனும் கரன்சி கொண்டு வந்துள்ளார்கள். அரபு நாடுகளும் இது போன்ற ஒரு பொது கரன்சிக்கு தயாராகின்றார்கள். ஏன் தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் உட்பட சில நாடுகள் சேர்ந்து பொது கரன்சி உருவாக்கவும் திட்டம் போட்டுள்ளன. அமெரிக்காவும் கனடாவும் மெக்ஸிகோவும் இணைந்து North American Union- என "The Late Great U.S.A" உருவாக்கி அதில் பொது கரன்சி உலவ விட திட்டங்கள் உள்ளன.

இந்த போட்டிகளையெல்லாம் விட்டு விட்டு பேசாமல் உலக அளவில் ஒரு பொது கரன்சி உருவாக்கி, அதற்கொரு உலக ரெசர்வ் பாங்க் உருவாக்கினால் பெரும்பாலான தலைவலிகள் தீரும் என்கின்றார்கள் பெரும்பாலானோர். இதைத்தான் http://www.singleglobalcurrency.org/-ம் வலியுறுத்துகின்றார்கள். 2025-க்குள் உலக அளவில் ஒரு பொது கரன்சி கொண்டு வருவது தான் இவர்கள் நோக்கம். பலரின் விருப்பமும் அதுதான்.முன்னாள் U.S Federal Reserver Chair Paul Volcker இவ்வாறாக கூறினார் "A global economy requires a global currency."உலக பொது கரன்சியானால் உலகில் அனைவருக்கும் சம்பளம் ஒரே கரன்சியில் வழங்கப்படுவதால் ஏற்றத்தாழ்வுகள் வெகுவாக குறையும். பெரும்பாலான பொருளாதார குளறுபடிகள் சரியாகும் என நம்புகின்றார்கள்.

Saturday, October 20, 2007

ஞாநிக்கு கண்டனக் கூட்டம்

ஆனந்த விகடனில் வெளிவந்த ஞாநியின் "விருப்பப்படி இருக்க விடுங்கள்" எனும் நயவஞ்சகக் கட்டுரை மீதான கண்டனக் கூட்டம் வாணி மஹாலில் 20.10.07 மாலை ஆறு மணிக்கு மேல் ஆரம்பித்து பத்து மணிவரையிலும் நடைபெற்றது.

ப‌த்திரிகையாள‌ர் ஏ.எஸ்.ப‌ன்னீர்செல்வ‌ம் த‌லைமைதாங்க.கவிஞர் த‌மிழ‌ச்சி . க‌விஞ‌ர் இளைய‌பார‌தி நிக‌ழ்ச்சியை தொகுத்த‌ளித்தார்.
கவிஞர் த‌மிழ‌ச்சி 'தீம்புனல்' சார்பில் முகவுரை ஆற்றினார்


முகப்புரை கவிஞர் தமிழச்சி

தலைமை

பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்

கண்டன உரை
----------------

கவிஞர் அறிவும‌தி

தோழர் சி மகேந்திரன்

பேராசிரியர் வீ.அரசு

பேராசிரியர் அ.மார்க்ஸ்

எழுத்தாளர் பிர‌ப‌ஞ்ச‌ன்

ச‌ட்டமன்ற உறுப்பினர் இர‌விக்குமார்

பத்திரிக்கையாளர் டி.எஸ்.எஸ்.மணி

எழுத்தாளர் இம‌யம்

கவிஞர் க‌ரிகாலன்

கவிஞர் ச‌ல்மா

கவிஞர் மனுஷ்யபுத்திரன்,

க‌விஞ‌ர் இளையபார‌தி

கவிஞர் கரிகாலன்

இரா.தெ.முத்து (த‌.மு.எ.ச‌.)

இன்னும் அதிக... பத்திரிக்கை நண்பர்கள் வந்து இருந்தார்கள்...

ஏற்கனவே அண்ணன் அறிமதி அவர்கள் தோழர் மணி செந்தில் மற்றும் என்னிடம் நீங்கள் ஆர்குட்டில் ஞாநிக்கு எதிராக‌ விவாதம் பன்னியதை ஒரு புத்தகமாக தயார் செய்து என்னிடம் தாருங்கள் நான் அதை முதல்வர் அவர்களிடம் தெரியபடுத்துகிறேன் என்று சொல்லி இருந்தார் அதன்படி
Gnani - The writer என்ற community யில் நாம் விவாதம் பன்னிய ஞானியின் எழுத்தில் வெளிபடும் ஆரிய மனம்….மற்றும் நமது மக்கள் அரங்கத்தில் நடந்த'' ஞானியின் அதிகபிரசங்கிதனம்'' மற்றும் நாம் ஞாநியிடம் கேள்வி கேட்டதையும் ஒரு புத்தகமாக தயார் செய்து அண்ணன் அறிவுமதியிடம் சமர்பித்தேன்

அதை கூட்டம் தொடங்கும் முன்பே நம் விவாத‌ தொகுப்பை கனிமொழி அவர்கள் இடம் தெரியபடுத்தினார்

பிறகு கவிஞர் தமிழச்சி முகப்புரை வழங்க கூட்டம் தொடங்கியது

அடுத்து பேச வந்த அண்ணன் அறிவுமதி அவர்கள் நம் விவாத தொகுப்பை எடுத்துக்ககொண்டு பேச தொடங்கினார்.


அவர் பேச்சில் நம் விவாத கருத்தை முன்வைத்தார்,ஞாநி அவர்கள் நம்மிடம் பதில் சொல்லமுடியாமல் உடல்நிலை சரியில்லை என்று பின் வாங்கியதையும் முன் வைத்தார்.

நம் விவாததில் உள்ள கருத்துக்களை படித்தும் காண்பித்தார்.

ஞாநி,மற்றும் அவருக்கு ஆதரவாக வந்தவர்கள் நாம் விவாத திறமை,மற்றும் நம் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவர்கள் பின் வாங்கி ஓடியதையும் தெரியபடுத்தினார்

எங்க‌ளுக்கு பின்னாலும் அடுத்த‌ த‌லைமுறை பெரியாரின் தொண்டர்க‌ளாக போராட அதிக‌ அளவில் வ‌ந்து கொண்டு இருப்ப‌தையும் தெரியப‌டுத்தினார்

இணையத்தில் எழுதும் தம்பிகள் வந்திருக்கின்றனர். நிகழ்வின் இறுதியில் நேரமிருந்தால் அவர்களும் பேச காத்திருக்கின்றனர் என்று கூறியிருந்தார்.

அனைவ‌ரும் அதை க‌வனித்தார்க‌ள்.

பிறகு தொடர்ச்சியாக க‌விஞர்கள்,மற்றும் எழுத்தாளர் பேசினார்க‌ள்....

ஞாநியை ம‌ட்டும‌ல்லாது, ஆனந்த‌விக‌ட‌னுக்கும் க‌ண்ட‌ன‌ம் தெரிவித்த‌ன‌ர்.

அண்ணன் அறிவும‌தி அவ‌ர்க‌ள் நம‌து விவாத‌த்தின் தொகுப்பை மேடையில் இருந்த‌வ‌ர்க‌ளிடம் காண்பித்தார்.

நிக‌ழ்ச்சி முடிந்த‌வுடன் அண்ணன் அறிவும‌தி அவ‌ர்க‌ள் கனிமொழி அவ‌ர்களிடம் என்னை அறிமுக‌ப்ப‌டுத்தி வைத்தார் நம‌து விவாத‌ தொகுப்பையும் அவ‌ர்க‌ளிடம் கொடுத்து இதை அப்பாவிடம் கூடுமா என்று தெரிய‌ப‌டுத்தினார்,அவ‌ரும் நம‌து இந்த‌ விவாத‌த்திற்க்கு பராட்டுக்க‌ளை தெரிவித்தார்,அப்பாவிடமும் தெரியபடுத்துகிறேன் என்றும் சொன்னார்.

அதன் பின் இயக்குனர் சீமான் எண்னை கட்டிபிடித்து பராட்டினார், மற்றும் க‌விஞர்க‌ள் மற்றும் எழுத்தாளர்களுக்கு என்னை அறிமுக‌ப்ப‌டுத்தினார்,

நமது இந்த விவாதம் அண்ணன் அறிவுமதி மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எழுத்தாளர்கள் மற்றும் முதல்வர் வரை சென்றது மிக பெருமைக்குறிய விசயமாக கருதப்படுகிறது

இந்த முயற்ச்சியை மேற்க்கொண்ட அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு நம் பராட்டுகளையும் தெரியபடுத்துவவோம்.

உண்மையில் இது நம‌து மிக‌ப்பெரிய வெற்றி என்றுதான் சொல்ல‌ வேண்டும்

Wednesday, October 17, 2007

இளையராஜாவின் வரலாற்று சுவடுகள்

இசை ஞானி இளையராஜாவின் வரலாற்று சுவடுகள் மென்புத்தகம் உங்கள் இறக்கத்துக்காக.

http://static.scribd.com/docs/1l0zcp3e2i21m.pdf

Monday, October 15, 2007

தமிழில் ஜோக்ஸ் மென்புத்தகம்."

தமிழில் ஜோக்ஸ் மென்புத்தகம்."Tamil Jokes" .http://static.scribd.com/docs/1iil7qy0m2jak.pdf

கருவாச்சி காவியம்"

கவிப்பேரரசு வைரமுத்துவின் "கருவாச்சி காவியம்" மென் புத்தகம் உங்கள் இறக்கத்துக்காக.Vairamuthu Karuvachi Kaviyam Tamil ebook for Download. Right click and Save.http://static.scribd.com/docs/5m1ffmiufnzgc.pdf