நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த். கட்சியைப் பதிவு செய்யும் விஷயத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்கே சிரிப்பு மூட்டியவர் ஆவர். "கட்சியில் ஆட்களை சேர்ப்பது என்றாலும் நீக்குவது என்றாலும் தலைவரின் முடிவு தான். கட்சியில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தலைவர்தான் எடுப்பார்'' என்று சட்டதிட்டங்களை வகுத்துக்கொண்டு போய் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தார்கள் தே.மு.தி.க.வினர். அரண்டு போய்விட்டார்கள் தேர்தல் ஆணையர்கள். ஜனநாயக நாட்டில் இப்படியொரு சட்டதிட்டத்துடன் கட்சியா என நொம்பலச் சிரிப்புடன் தே.மு.தி.க.வின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டார்கள்.
இத்தனைக்கும் தன் கட்சியில் பழைய பலாப் பழமான பண்ருட்டி ராமச்சந்திரனை அவைத்தலைவராக வைத்திருக்கிறார் விஜயகாந்த். அப்புறம் பொதுச் செயலாளர், மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர் எல்லோரையும் நியமித்திருக்கிறார். அத்தனை பேரையும் வைத்துக்கொண்டு, நான்தான் முடிவெடுப்பேன் என்று சட்டதிட்டம் வகுத்தால், அவர்களெல்லாம் எதற்கு என்ற கேள்வியை சாதாரணத் தொண்டன்கூட கேட்பான். மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்களையும் 40 எம்.பி.க்களையும் மேடைக்கு மேடை கேள்வி கேட்டுச் சிரிப்பு மூட்டும் விஜயகாந்த்துக்கு, தன்னுடைய கட்சியின் சட்ட திட்டம் பற்றித் தேர்தல் ஆணையம் கேள்வி கேட்குமே என்ற அரசியல் அடிப்படை தெரியாமல் போய்விட்டது.
பாவம் விஜயகாந்த். மறுபடியும் சட்ட திட்டம் வகுத்துத் தன் கட்சியை பதிவு செய்ய வேண்டியதாயிற்று.
Tuesday, September 25, 2007
விஜயகாந்த்
Posted by சசி at 7:10 PM
Labels: விஜயகாந்த்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment