Tuesday, September 25, 2007

விஜயகாந்தின் மதச்சார்பின்மையும், தமிழ்பற்றும்!!

இதுநாள்வரை தாம் அல்லாவுக்காக குல்லா போடுபவர் என்றும் இஸ்லாமியர்கள் எனது ஒன்றுவிட்ட தம்பிகள் என்று சமத்துவம் சமதர்மம் பேசிய விஜய காந்து "இந்துக்களை மட்டுமே முதல்வர் தொடர்ந்து புண்படுத்தும் வகையில் பேசி வருகிறார்". ஆனால் அவர் மற்ற மதத்தினர் விஷயத்தில் தலையிடுவதில்லை. " என்று திருவாய் மலர்ந்துள்ளார். தேமுதிக என்ற தேர முடியாத திக்குமுக்கு கழக தொடக்கவிழாவில் பட்டை ( அந்த பட்டை அல்ல) நெற்றியில் அடித்துவந்து தம் இந்துத்துவ அடையாளத்தை வெளிப்படுத்தி தாம் தமிழர்களுக்காக பாடுபடப்போவதாகவும், மதசார்பற்றவர் என்றும் சொன்னார். "பட்டை" வெளிப்படையாக தெரிந்ததும் பாஜக அவரையே சுற்றி சுற்றி வந்து கூட்டணி அமைத்து சட்டமன்றத்தில் நுழைய முயற்சித்தது. விஜயகாந்தும் தமது இந்துத்துவ வேசம் வெளிப்பட்டுவிட்டால் (போட்ட) முதலும் மோசமாகி முற்றிலும் மோசமாகிவிடும் என்று தவிர்த்தார்.

எந்த கட்சியும் சரியில்லை என்று கருதிய சிலர் வேறுவழியின்றி மக்கள் ஆட்சி தத்துவத்திற்கு மதிப்பளிப்பதற்காக விஜயகாந்துக்கு ஓட்டுபோட்டனர், 60 விழுக்காடு பதிவான வாக்குகளில் 8% விழுக்காடு இவருக்கு கிடைத்தது. 234 தொகுதிகளில் நின்று இந்த வாக்கை பெற்றவர் வெறும் 25 தொகுதிகளில் நின்று காங்கிரசை இவருக்கு கிடைத்த 8% ஓட்டை வைத்து ஓட்டை கணக்கு போட்டு தாம் காங்கிரசை விட பெரிய கட்சி என்று சொல்லி வந்தார். அரசயலை கூர்ந்து கவனிப்பவர்கள் தவிர வேறு எவருக்கும் இதில் உள்ள சூட்சமம் புரியாது. விஜயகாந்துக்கு செல்வாக்கு இருப்பதாக அவரே ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினர். மதுரை இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் கிடைத்ததற்கு விஜயகாந்தின் ஊர் என்பதாலும், அவருடைய உறவினர்கள் என தெலுங்கு பேசுபவர்கள் அதிகம் இருப்பதாலும், ஜெயலலிதா எதிர்கட்சியாகிவிட்டதால் நம்பிக்கை இழந்ததால் விஜயகாந்துக்கு அதிக வாக்குகள் கிடைத்தது, இதைத்தவிர வேறு காரணங்கள் எதுவும் இருக்கவே முடியாது.

இந்துக்களை மட்டுமே முதல்வர் தொடர்ந்து புண்படுத்தும் வகையில் பேசி வருகிறார். ஆனால் அவர் மற்ற மதத்தினர் விஷயத்தில் தலையிடுவதில்லை. " என்று சொல்லி இருப்பதனால் முஸ்லிம்களின் சகோதரன் என்று சொல்லி வந்த விஜயகாந்து இதன் வழி முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் கருணாநிதி திட்டவில்லையே ஆதங்கப்பட்டு இருப்பது நன்றாக தெரிகிறது. இவருடைய மறைமுக இந்துத்துவ முகமூடி கிழிந்து தொங்குகிறது. தவளை தன் வாயால் கெடும் என்ற "தமிழ் பழமொழியை" பின்வரும் தேர்தல்களில் விஜயகாந்து தெரிந்து கொள்வார்.

திருவள்ளூவர் எந்த காலேஜில் படித்தார் என்று கேட்டு தனது மேதாவித்தனத்தை தனது விசிலடிச்சான் கும்பலுக்கு காட்டி சிந்திக்க வைத்திருக்கும் புரட்சிக்கலைர்க்கு மேலும் ஒரு யோசனை ,கேள்வி கேட்பதற்கு பாரதியார் ,பாரதிதாசன் எந்த கல்லூரியில் படித்தார்கள்? அவர்கள் பெயரில் எதற்கு பல்கலைகழகங்கள்?.

No comments: