சென்னையில் வாலாஜா சாலையில் உள்ள அரசினர் விடுதிக்கு எதிரில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கருணாநிதி தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
அதில் நானும் ஒருவன்
கூட்டத்தில் தலைவர்கள் பேசியது சில வரிகள்
முதல்வர் கருணாநிதி :
சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மக்கள் சக்தியை ஒன்று திரட்டினால் மட்டுமே நீதி கிடைக்கும் என்று கூறிய அவர், இப்பிரச்சினையில் அவ்வளவு விரைவில் நீதி கிடைத்து விடாது என்றார்.
மக்கள் சக்தியால் மட்டுமே நீதி கிடைக்கும் என்று தாம் கூறுவதற்குக் காரணம் ''நாம் எப்போதும் நாமாக இருக்கிறோம். அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள் என்று சொல்வது புரியும் என்று நினைக்கிறேன்" என்று முதல் அமைச்சர் கூறினார்.
தொல்.திருமாவளவன்:
சேது கால்வாய் திட்டத்தின் பெயரை மாத்தவேண்டும் ,தமிழன் கால்வாய்,அல்லது கலைஞர் கால்வாய் என்று மாற்றவேண்டும்
உச்சநீதிமன்றம் சொல்வதனால் ஆட்சியை கலைத்துவிடமுடியாது,அப்படி ஒரு வேலை கலைத்தால் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டடோம் தமிழ்நாடு பற்றி எரியும் ..
தா.பாண்டியன்:
தலைமை நீதிபதி திரு.பாலகிருஷ்ணன் இப்போது இந்தியாவில் இல்லை.
பார்ப்பன குடிமிகள் இதை செய்திருக்கிறார்கள்
6 1/2 கோடி மக்களின் உணர்வுகளை இரண்டு பார்ப்பன குடிமிகள் தீர்மானிப்பதா?
பாலு:
அனைத்து நீதிபதிகளும் சரியாக தீர்ப்பு அளிப்பதில்லை. சரியாக தீர்ப்பு கூறுவதாக இருந்தால் எதற்காக மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய பாலு, நீதிபதிகள் மீதும் ஊழல் புகார்கள் உள்ளதாகச் சுட்டிக் காட்டினார்.
பொறுப்பில் உள்ள நீதிபதிகள் பலர் தவறு புரிவதாகவும், இவர்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் (இம்பீச்மென்ட்) கொண்டு வருவது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசிக்க வேண்டும் என்றும் பாலு குறிப்பிட்டார்
உண்ணாவிரதப் போராட்டம் உண்மையில்
ஜெயாவிற்கும் சுற்றி இருக்கும் ஜால்ரா கும்பல்களுக்கும் மக்களே இன்று சரியான தீர்ப்புகளை கொடுத்துவிட்டார்கள்.
மக்கள் நலனில் அக்கறை இல்லாத தலைவர்கள் இனம் காணப்பட்டு விட்டார்கள்.பார்ப்பன நீதிபதிகள் ஓவர்டைம் செஞ்சி குடுத்த தீர்ப்பு, செல்லுபடியாகவில்லை
Monday, October 1, 2007
உண்ணாவிரதப் போராட்டம்
Posted by சசி at 8:03 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment