Friday, September 28, 2007

புகழ்பெற்ற ஆயிரக்கணக்கான ஆங்கில நூல்கள் இலவசம்.

ஆங்கில இலக்கியம் படிப்பதில் ஆர்வமுடைய நண்பர்களுக்காக இத்தகவல். ஷேக்ஸ்பியரின் மெக்பத், எச்.ஜி.வெல்ஸின் - இன்விஸிபில் மேன் என ஆங்கில இலக்கிய நூல்கள் ஆயிரக்கணக்கானவற்றை நாம் இலவசமாக இறக்கிக் கொள்ளமுடியும்.

விர்ஜினியா பல்கலைக்கழகத்தின் மின்னிலக்க நூலகம் இவற்றை வழங்குகிறது. ஒரு ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால் பெரும்பாலான புத்தகங்களின் அளவு 300 KB ஐவிட குறைவுதான். ஆம்!. ஷேக்ஸ்பியரின் - ஜூலியஸ் சீஸர் முழு நாடகமும் 250 KB ஐவிட குறைவுதான். இங்கு அனைத்து மின்னூல்களும் மைக்ரோசாப்ட் ரீடர் கோப்பாக சேமிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பெயரைக்கொண்டோ அல்லது புத்தகத்தின் பெயரைக் கொண்டோ இந்த நூலகத்தில் தேடி நமக்குத் தேவையானவற்றைக் கண்டுபிடிக்கலாம். MS Reader இல்லையென்றால் மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக்கொள்ளலாம். இந்த மென்பொருள் நமக்காகப் புத்தகங்களை வாசிக்கவும் செய்யவும். அஷ்டாவதானி, தசாவதானிபோல ஒரு புத்தகத்தை வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டு அதே நேரத்தில் இன்னொரு புத்தகத்தை நாமாக வாசிக்கவும்கூடச் செய்யலாம் . புத்தகத்தின் வாசிப்பைக் கேட்க உங்கள் கணினியில் ஏதாவது ஒரு பேசுபொறி(Speech engine ) நிறுவப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அதையும் இணையத்திலிருந்து இறக்கி நிறுவிக்கொள்ளவும்

No comments: