Wednesday, September 26, 2007

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் திறப்புவிழா

செப்டம்பர் 29-09-2007 ஆம் தேதி, நமது வாழ்விலோர் திருநாள்! அறிவு ஆசான் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் பெயரில் அகிலத்திற்கும் அவர்தம் கொள்கை, கோட்பாடுகளை, கல்வியின் மூலமாகப் பரப்பிட பெருமைமிகு பல்கலைக் கழகம் தஞ்சை வல்லத்தில், ``பெரியார் - மணியம்மை பல்கலைக் கழகம் என்ற பெயரில், தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் மானமிகு, மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்படவிருக்கிறது.கல்வியின்மூலம் தந்தை பெரியார் விரும்பிய `இனிவரும் உலகம் என்பதை `வந்த உலகமாக ஆக்குவதற்குக் கால்கோள் விழா அவ் விழாவாகும்!

இது தனிப்பட்ட எவருடைய பல்கலைக் கழகமும் அல்ல; மக்களால், மக்களுக்காக நடத்தப் பெறும் மக்கள் பல்கலைக் கழகமாகும்!சமூகப் புரட்சி சரித்திரத்தின் புதியதோர் பொன்னேட்டை இணைக்கும் புத்தாக்கமாகும்.அதனால்தான் இதன் இலச்சினையிலேயே``புது சிந்தனை - புத்தாக்கம் - புது உலகு என்று அமைக்கப் பட்டுள்ளது.திராவிடப் பேரியக்கத்தின் சாதனைகளில் இதுவும் குறிப்பிடத் தகுந்ததே!காலம் தந்த கருத்துக் கொடையாம் உழைப்பின் உருவம் கலைஞர் தந்த முப்பெரும் பரிசுகள் பெரியார் கொள்கையாளர்களுக்கு இவ்வாண்டு.

1. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் - பயிற்சி - செயல் திட்டம்
2. பெரியார் திரைப்பட வெற்றி உலா!
3. பெரியார் - மணியம்மை பல்கலைக் கழகம்!
இந்நாள் கழகக் குடும்பத்தவர்களின் சங்கமத் திருநாளாக இருக்கவேண்டாமா? எனவே, வாருங்கள் தோழர்களே, தோழியர் களே! தஞ்சைக்கு வாருங்கள்!தரணி முழுவதும் பெரியார் பரணி பாடிட, முகிழ்த்திடும் பல்கலைக் கழகத்திற்கு வாருங்கள், வாருங்கள்!வாழ்த்துகளைக் கூறிட வந்து சேருங்கள் என்று இருகரம் கூப்பி, உங்களில் ஒருவன் அழைக்கிறேன்!காலை 9 மணிக்கு முன்னதாக மன்றத்தில் அமருங்கள்!அன்பாடு வரவேற்கக் காத்திருக்கும்,

உங்கள்
தொண்டன், தோழன்,
கி. வீரமணி

மேலும் விபரங்களுக்கு விடுதலை நாளிதழ் இங்கே

No comments: