தெற்கு ரயில்வேயின் ‘கிரிஸ்’ குழுவினர் இந்த இணையதளத்தை பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். ரயில் டிக்கெட்டுகளின் பி.என்.ஆர். எண்ணைப் பயன் டுத்தி முன்பதிவு, காலி இருக்கைகள், சேவைகள் ஆகியவற்றின் அடுத்த 7 நாள்கள் வரையிலான நிலவரம், ரயில் எண்கள், பெருநகரங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள், சுற்றுலா தகவல்கள், ரயில் நிலையங்களின் குறியீடு, கட் டண விவரம், ரீஃபண்ட் வசதி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பய ணிகள் இந்த இணையதளத்தில் பெறலாம்.
முதல் வகுப்பு பெட்டிகளில் காலியிடம் இருந்தால் 2-ம் வகுப்பு டிக்கெட் முன்பதிவு செய்த பயணி களுக்கு சொகுசு பயணத்துக்கு வாய்ப்பு வழங்கும் பட்டியல் விவ ரங்களையும் அறியலாம். இதே போல செய்திக் குறிப்புகள், ரயில்வே உயர் அலுவலர்களின் தொலைபேசி எண்கள், ரயில்வேயின் பல்வேறு துறைகள் பற்றிய தகவல்களும் இந்த இணை யதளத்தில் வழங்கப்பட உள்ளன.
இந்த இணையதளத்துக்கான முகவரி: http://www.southernrailway.gov.in/
No comments:
Post a Comment