வான் கோகின் 30 ஓவியங்கள் - பவர்பாயின்ட் ஷோ. ‘ஸ்டாரி, ஸ்டாரி நைட்’ என்ற பாடலும் கூடவே ஒலிக்கும். நான் ஸ்பீக்கரை அணைத்துவிட்டுத்தான் இதைப் பார்ப்பது வழக்கம்.
ஹாலந்தில் இருக்கும் வான் கோக் அருங்காட்சியகத்தின் கேட்டலாக், ஆங்கிலத்தில் - 24 பக்க பி.டி.எஃப். கோப்பு. அழகான படங்கள், பயனுள்ள தகவல்கள்.
The Unknown Monet - இந்தப் பெயரில் நடந்த ஒரு கண்காட்சி, 19ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு ஓவிய மேதையான க்ளோத் மோனேயின் (Claude Monet) அவ்வளவாக வெளியே தெரியாத அற்புதப் படைப்புகளை அறிமுகப்படுத்தியது. இந்த பி.டி.எஃப். கோப்பில் அந்தப் படைப்புகள், அவருடைய வாழ்க்கை வரலாறு எல்லாம் இருக்கின்றன. குட்டி விருந்து.
Cézanne in Provence - க்ளோத் மோனேயின் சகாவான போல் செசான் (Paul Cézanne) நவீன ஓவியக் கலையின் தந்தை என்று சொல்லப்படும் அளவுக்குப் பெரிய ஆள், மேதை. அவர் தன் சொந்த ஊரில் வரைந்த அதிமுக்கியமான படைப்புகள், வாழ்க்கை வரலாறு ஆகியவை இந்தக் கோப்பில் இருக்கின்றன. முக்கியமான ஃபைல்.
Monet’s Seascapes - மோனேயின் அற்புதச் சித்தரிப்பில் கடல் மற்றும் கடல் சார்ந்த காட்சிகள். இவற்றைப் பார்ப்பது நம்ப முடியாத ஓர் அனுபவம்.
மார்க் ஷகாலின் 19 ஓவியங்கள். பவர்பாயின்ட் கோப்பு. ஸ்பீக்கரை அணைத்துவிட்டுப் பார்த்தால் மேலும் நல்ல அனுபவமாக இருக்கும்.
Saturday, September 29, 2007
கீழ்க்கண்ட கலைசார் கோப்புகளை டவுன்லோடு செய்து மகிழலாம்.
Posted by சசி at 12:44 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment