ஆனந்த விகடனில் வெளிவந்த ஞாநியின் "விருப்பப்படி இருக்க விடுங்கள்" எனும் நயவஞ்சகக் கட்டுரை மீதான கண்டனக் கூட்டம் வாணி மஹாலில் 20.10.07 மாலை ஆறு மணிக்கு மேல் ஆரம்பித்து பத்து மணிவரையிலும் நடைபெற்றது.
பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் தலைமைதாங்க.கவிஞர் தமிழச்சி . கவிஞர் இளையபாரதி நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.
கவிஞர் தமிழச்சி 'தீம்புனல்' சார்பில் முகவுரை ஆற்றினார்
முகப்புரை கவிஞர் தமிழச்சி
தலைமை
பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்
கண்டன உரை
----------------
கவிஞர் அறிவுமதி
தோழர் சி மகேந்திரன்
பேராசிரியர் வீ.அரசு
பேராசிரியர் அ.மார்க்ஸ்
எழுத்தாளர் பிரபஞ்சன்
சட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார்
பத்திரிக்கையாளர் டி.எஸ்.எஸ்.மணி
எழுத்தாளர் இமயம்
கவிஞர் கரிகாலன்
கவிஞர் சல்மா
கவிஞர் மனுஷ்யபுத்திரன்,
கவிஞர் இளையபாரதி
கவிஞர் கரிகாலன்
இரா.தெ.முத்து (த.மு.எ.ச.)
இன்னும் அதிக... பத்திரிக்கை நண்பர்கள் வந்து இருந்தார்கள்...
ஏற்கனவே அண்ணன் அறிமதி அவர்கள் தோழர் மணி செந்தில் மற்றும் என்னிடம் நீங்கள் ஆர்குட்டில் ஞாநிக்கு எதிராக விவாதம் பன்னியதை ஒரு புத்தகமாக தயார் செய்து என்னிடம் தாருங்கள் நான் அதை முதல்வர் அவர்களிடம் தெரியபடுத்துகிறேன் என்று சொல்லி இருந்தார் அதன்படி
Gnani - The writer என்ற community யில் நாம் விவாதம் பன்னிய ஞானியின் எழுத்தில் வெளிபடும் ஆரிய மனம்….மற்றும் நமது மக்கள் அரங்கத்தில் நடந்த'' ஞானியின் அதிகபிரசங்கிதனம்'' மற்றும் நாம் ஞாநியிடம் கேள்வி கேட்டதையும் ஒரு புத்தகமாக தயார் செய்து அண்ணன் அறிவுமதியிடம் சமர்பித்தேன்
அதை கூட்டம் தொடங்கும் முன்பே நம் விவாத தொகுப்பை கனிமொழி அவர்கள் இடம் தெரியபடுத்தினார்
பிறகு கவிஞர் தமிழச்சி முகப்புரை வழங்க கூட்டம் தொடங்கியது
அடுத்து பேச வந்த அண்ணன் அறிவுமதி அவர்கள் நம் விவாத தொகுப்பை எடுத்துக்ககொண்டு பேச தொடங்கினார்.
அவர் பேச்சில் நம் விவாத கருத்தை முன்வைத்தார்,ஞாநி அவர்கள் நம்மிடம் பதில் சொல்லமுடியாமல் உடல்நிலை சரியில்லை என்று பின் வாங்கியதையும் முன் வைத்தார்.
நம் விவாததில் உள்ள கருத்துக்களை படித்தும் காண்பித்தார்.
ஞாநி,மற்றும் அவருக்கு ஆதரவாக வந்தவர்கள் நாம் விவாத திறமை,மற்றும் நம் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவர்கள் பின் வாங்கி ஓடியதையும் தெரியபடுத்தினார்
எங்களுக்கு பின்னாலும் அடுத்த தலைமுறை பெரியாரின் தொண்டர்களாக போராட அதிக அளவில் வந்து கொண்டு இருப்பதையும் தெரியபடுத்தினார்
இணையத்தில் எழுதும் தம்பிகள் வந்திருக்கின்றனர். நிகழ்வின் இறுதியில் நேரமிருந்தால் அவர்களும் பேச காத்திருக்கின்றனர் என்று கூறியிருந்தார்.
அனைவரும் அதை கவனித்தார்கள்.
பிறகு தொடர்ச்சியாக கவிஞர்கள்,மற்றும் எழுத்தாளர் பேசினார்கள்....
ஞாநியை மட்டுமல்லாது, ஆனந்தவிகடனுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
அண்ணன் அறிவுமதி அவர்கள் நமது விவாதத்தின் தொகுப்பை மேடையில் இருந்தவர்களிடம் காண்பித்தார்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் அண்ணன் அறிவுமதி அவர்கள் கனிமொழி அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் நமது விவாத தொகுப்பையும் அவர்களிடம் கொடுத்து இதை அப்பாவிடம் கூடுமா என்று தெரியபடுத்தினார்,அவரும் நமது இந்த விவாதத்திற்க்கு பராட்டுக்களை தெரிவித்தார்,அப்பாவிடமும் தெரியபடுத்துகிறேன் என்றும் சொன்னார்.
அதன் பின் இயக்குனர் சீமான் எண்னை கட்டிபிடித்து பராட்டினார், மற்றும் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தினார்,
நமது இந்த விவாதம் அண்ணன் அறிவுமதி மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எழுத்தாளர்கள் மற்றும் முதல்வர் வரை சென்றது மிக பெருமைக்குறிய விசயமாக கருதப்படுகிறது
இந்த முயற்ச்சியை மேற்க்கொண்ட அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு நம் பராட்டுகளையும் தெரியபடுத்துவவோம்.
உண்மையில் இது நமது மிகப்பெரிய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்
Saturday, October 20, 2007
ஞாநிக்கு கண்டனக் கூட்டம்
Posted by சசி at 7:59 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment