ஆனந்த விகடனில் வெளிவந்த ஞாநியின் "விருப்பப்படி இருக்க விடுங்கள்" எனும் நயவஞ்சகக் கட்டுரை மீதான கண்டனக் கூட்டம் வாணி மஹாலில் 20.10.07 மாலை ஆறு மணிக்கு மேல் ஆரம்பித்து பத்து மணிவரையிலும் நடைபெற்றது.
பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் தலைமைதாங்க.கவிஞர் தமிழச்சி . கவிஞர் இளையபாரதி நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.
கவிஞர் தமிழச்சி 'தீம்புனல்' சார்பில் முகவுரை ஆற்றினார்
முகப்புரை கவிஞர் தமிழச்சி
தலைமை
பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்
கண்டன உரை
----------------
கவிஞர் அறிவுமதி
தோழர் சி மகேந்திரன்
பேராசிரியர் வீ.அரசு
பேராசிரியர் அ.மார்க்ஸ்
எழுத்தாளர் பிரபஞ்சன்
சட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார்
பத்திரிக்கையாளர் டி.எஸ்.எஸ்.மணி
எழுத்தாளர் இமயம்
கவிஞர் கரிகாலன்
கவிஞர் சல்மா
கவிஞர் மனுஷ்யபுத்திரன்,
கவிஞர் இளையபாரதி
கவிஞர் கரிகாலன்
இரா.தெ.முத்து (த.மு.எ.ச.)
இன்னும் அதிக... பத்திரிக்கை நண்பர்கள் வந்து இருந்தார்கள்...
ஏற்கனவே அண்ணன் அறிமதி அவர்கள் தோழர் மணி செந்தில் மற்றும் என்னிடம் நீங்கள் ஆர்குட்டில் ஞாநிக்கு எதிராக விவாதம் பன்னியதை ஒரு புத்தகமாக தயார் செய்து என்னிடம் தாருங்கள் நான் அதை முதல்வர் அவர்களிடம் தெரியபடுத்துகிறேன் என்று சொல்லி இருந்தார் அதன்படி
Gnani - The writer என்ற community யில் நாம் விவாதம் பன்னிய ஞானியின் எழுத்தில் வெளிபடும் ஆரிய மனம்….மற்றும் நமது மக்கள் அரங்கத்தில் நடந்த'' ஞானியின் அதிகபிரசங்கிதனம்'' மற்றும் நாம் ஞாநியிடம் கேள்வி கேட்டதையும் ஒரு புத்தகமாக தயார் செய்து அண்ணன் அறிவுமதியிடம் சமர்பித்தேன்
அதை கூட்டம் தொடங்கும் முன்பே நம் விவாத தொகுப்பை கனிமொழி அவர்கள் இடம் தெரியபடுத்தினார்
பிறகு கவிஞர் தமிழச்சி முகப்புரை வழங்க கூட்டம் தொடங்கியது
அடுத்து பேச வந்த அண்ணன் அறிவுமதி அவர்கள் நம் விவாத தொகுப்பை எடுத்துக்ககொண்டு பேச தொடங்கினார்.
அவர் பேச்சில் நம் விவாத கருத்தை முன்வைத்தார்,ஞாநி அவர்கள் நம்மிடம் பதில் சொல்லமுடியாமல் உடல்நிலை சரியில்லை என்று பின் வாங்கியதையும் முன் வைத்தார்.
நம் விவாததில் உள்ள கருத்துக்களை படித்தும் காண்பித்தார்.
ஞாநி,மற்றும் அவருக்கு ஆதரவாக வந்தவர்கள் நாம் விவாத திறமை,மற்றும் நம் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவர்கள் பின் வாங்கி ஓடியதையும் தெரியபடுத்தினார்
எங்களுக்கு பின்னாலும் அடுத்த தலைமுறை பெரியாரின் தொண்டர்களாக போராட அதிக அளவில் வந்து கொண்டு இருப்பதையும் தெரியபடுத்தினார்
இணையத்தில் எழுதும் தம்பிகள் வந்திருக்கின்றனர். நிகழ்வின் இறுதியில் நேரமிருந்தால் அவர்களும் பேச காத்திருக்கின்றனர் என்று கூறியிருந்தார்.
அனைவரும் அதை கவனித்தார்கள்.
பிறகு தொடர்ச்சியாக கவிஞர்கள்,மற்றும் எழுத்தாளர் பேசினார்கள்....
ஞாநியை மட்டுமல்லாது, ஆனந்தவிகடனுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
அண்ணன் அறிவுமதி அவர்கள் நமது விவாதத்தின் தொகுப்பை மேடையில் இருந்தவர்களிடம் காண்பித்தார்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் அண்ணன் அறிவுமதி அவர்கள் கனிமொழி அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் நமது விவாத தொகுப்பையும் அவர்களிடம் கொடுத்து இதை அப்பாவிடம் கூடுமா என்று தெரியபடுத்தினார்,அவரும் நமது இந்த விவாதத்திற்க்கு பராட்டுக்களை தெரிவித்தார்,அப்பாவிடமும் தெரியபடுத்துகிறேன் என்றும் சொன்னார்.
அதன் பின் இயக்குனர் சீமான் எண்னை கட்டிபிடித்து பராட்டினார், மற்றும் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தினார்,
நமது இந்த விவாதம் அண்ணன் அறிவுமதி மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எழுத்தாளர்கள் மற்றும் முதல்வர் வரை சென்றது மிக பெருமைக்குறிய விசயமாக கருதப்படுகிறது
இந்த முயற்ச்சியை மேற்க்கொண்ட அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு நம் பராட்டுகளையும் தெரியபடுத்துவவோம்.
உண்மையில் இது நமது மிகப்பெரிய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்
Saturday, October 20, 2007
ஞாநிக்கு கண்டனக் கூட்டம்
Posted by
சசி
at
7:59 PM
0
comments
Wednesday, October 17, 2007
இளையராஜாவின் வரலாற்று சுவடுகள்
இசை ஞானி இளையராஜாவின் வரலாற்று சுவடுகள் மென்புத்தகம் உங்கள் இறக்கத்துக்காக.
http://static.scribd.com/docs/1l0zcp3e2i21m.pdf
Posted by
சசி
at
7:16 PM
0
comments
Monday, October 15, 2007
தமிழில் ஜோக்ஸ் மென்புத்தகம்."
தமிழில் ஜோக்ஸ் மென்புத்தகம்."Tamil Jokes" .http://static.scribd.com/docs/1iil7qy0m2jak.pdf
Posted by
சசி
at
9:23 PM
0
comments
கருவாச்சி காவியம்"
கவிப்பேரரசு வைரமுத்துவின் "கருவாச்சி காவியம்" மென் புத்தகம் உங்கள் இறக்கத்துக்காக.Vairamuthu Karuvachi Kaviyam Tamil ebook for Download. Right click and Save.http://static.scribd.com/docs/5m1ffmiufnzgc.pdf
Posted by
சசி
at
9:22 PM
2
comments
நகைச்சுவை
மோகன் கிருட்டிணமூர்த்தியின் "நகைச்சுவை தொகுப்பு" தமிழில் ஜோக்ஸ் மென்புத்தகம் Tamil jokes Mohan Krishnamoorthy e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/7beo3s5250dew.pdf
Posted by
சசி
at
9:18 PM
0
comments
மாற்றாக
Internet explorer க்கு மாற்றாக Firefox
Adobe Acrobat Reader க்கு மாற்றாக Foxit Reader
Windows Media Player க்கு மாற்றாக VLC media player
iTune க்கு மாற்றாக Sharepod
Real Player க்கு மாற்றாக Real Alternative
QuickTime க்கு மாற்றாக QuickTime Alternative
Windows Picture and Fax Viewer க்கு மாற்றாக Irfan View
Windows zip க்கு மாற்றாக 7-zip
Posted by
சசி
at
9:50 AM
0
comments
Monday, October 8, 2007
சேகுவேராவின் நினைவு தினம்..
- காஸ்ட்ரோ பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியிலிருந்து.
இன்று உலகம் முழுவதும் மனிதர்கள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஏகாதிபத்திய ஆட்சியினரால் மடிந்துகொண்டே இருக்கிறார்கள்.
ஏகாதிபத்தியத்திற்க்கு எதிரக சர்வாதிகாரத்திற்க்கு எதிராக உலகத்தில் எந்த பகுதில் மக்கள் சிலிர்த்தெழுந்தாலும் அவர்களுகு உதவ தன்னையே அர்ப்பனிக்க தயாராகவே எப்போதும் இருந்தார் சே!
சே இந்த உலகின் மிகப்பெரிய சின்னமாக இருக்கிறார்.புரட்சிகரத்தன்மைக்கும், தைரியத்திற்கும் உயர்ந்த பண்புகளுக்கும், அவர் உதாரணமாக திகழ்கிறார். மூன்றாம் உலகத்தின் போர்க்குணமிக்க புரட்சிக்காரனுக்குப் பிரத்தியேகமான அடையாளமாகி விட்டார்.
உலகின் மிகச்சிறந்த கொரில்லாப் போர்த் தந்திர வித்தகர். மனிதாபிமானி,அவரது நினைவுகளை நெஞ்சில் சுமப்போம்.....
Posted by
சசி
at
10:48 PM
1 comments
Thursday, October 4, 2007
ஊரைக் கலக்கும் ராஜா பாட்டு!
ராம் படத்தில் அட்டகாசமாக இசையமைத்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அசத்தின. அதன் பின்னர் தற்போது அதே ஜீவாவுக்காக, கற்றது தமிழ் படத்தில் கலக்கலாக இசையமைத்துள்ளார் யுவன்.
பாடல்கள் அனைத்தும் வெளியான சூட்டிலேயே ஹிட் ஆகியுள்ளன. குறிப்பாக இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் பறவையாய் என்னை ஆக்கி விட்டாய் என்ற பாடல் இதயத்தை வருடுவதாக உள்ளது.மொத்தம் உள்ள 6 பாடல்களுமே கேட்பதற்கு இனிமையாக உள்ளது. ஆடியோ ரிலீஸ் லேட் ஆனாலும், பாடல்கள் அனைத்தும் படு டேஸ்ட்டாக வந்துள்ளன.இசைப் பிரியர்களின் இதயங்களை கற்றது தமிழ் பாடல்கள் வருடும் என்பதில் சந்தேகம் இல்லை. படம் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது.
Posted by
சசி
at
5:23 AM
0
comments
Monday, October 1, 2007
உண்ணாவிரதப் போராட்டம்
சென்னையில் வாலாஜா சாலையில் உள்ள அரசினர் விடுதிக்கு எதிரில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கருணாநிதி தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
அதில் நானும் ஒருவன்
கூட்டத்தில் தலைவர்கள் பேசியது சில வரிகள்
முதல்வர் கருணாநிதி :
சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மக்கள் சக்தியை ஒன்று திரட்டினால் மட்டுமே நீதி கிடைக்கும் என்று கூறிய அவர், இப்பிரச்சினையில் அவ்வளவு விரைவில் நீதி கிடைத்து விடாது என்றார்.
மக்கள் சக்தியால் மட்டுமே நீதி கிடைக்கும் என்று தாம் கூறுவதற்குக் காரணம் ''நாம் எப்போதும் நாமாக இருக்கிறோம். அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள் என்று சொல்வது புரியும் என்று நினைக்கிறேன்" என்று முதல் அமைச்சர் கூறினார்.
தொல்.திருமாவளவன்:
சேது கால்வாய் திட்டத்தின் பெயரை மாத்தவேண்டும் ,தமிழன் கால்வாய்,அல்லது கலைஞர் கால்வாய் என்று மாற்றவேண்டும்
உச்சநீதிமன்றம் சொல்வதனால் ஆட்சியை கலைத்துவிடமுடியாது,அப்படி ஒரு வேலை கலைத்தால் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டடோம் தமிழ்நாடு பற்றி எரியும் ..
தா.பாண்டியன்:
தலைமை நீதிபதி திரு.பாலகிருஷ்ணன் இப்போது இந்தியாவில் இல்லை.
பார்ப்பன குடிமிகள் இதை செய்திருக்கிறார்கள்
6 1/2 கோடி மக்களின் உணர்வுகளை இரண்டு பார்ப்பன குடிமிகள் தீர்மானிப்பதா?
பாலு:
அனைத்து நீதிபதிகளும் சரியாக தீர்ப்பு அளிப்பதில்லை. சரியாக தீர்ப்பு கூறுவதாக இருந்தால் எதற்காக மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய பாலு, நீதிபதிகள் மீதும் ஊழல் புகார்கள் உள்ளதாகச் சுட்டிக் காட்டினார்.
பொறுப்பில் உள்ள நீதிபதிகள் பலர் தவறு புரிவதாகவும், இவர்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் (இம்பீச்மென்ட்) கொண்டு வருவது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசிக்க வேண்டும் என்றும் பாலு குறிப்பிட்டார்
உண்ணாவிரதப் போராட்டம் உண்மையில்
ஜெயாவிற்கும் சுற்றி இருக்கும் ஜால்ரா கும்பல்களுக்கும் மக்களே இன்று சரியான தீர்ப்புகளை கொடுத்துவிட்டார்கள்.
மக்கள் நலனில் அக்கறை இல்லாத தலைவர்கள் இனம் காணப்பட்டு விட்டார்கள்.பார்ப்பன நீதிபதிகள் ஓவர்டைம் செஞ்சி குடுத்த தீர்ப்பு, செல்லுபடியாகவில்லை
Posted by
சசி
at
8:03 PM
0
comments